'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஐடி மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தளர்வுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'...

கொரோனா பாதிப்பு காரணமாக பல நிறுவனங்களும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான ஒர்க் பிரம் ஹோம் வாய்ப்பை ஊழியர்களுக்கு கொடுத்துள்ளன. ஆனால் முன்னதாக இதில் நிறுவனங்களுக்கு நிலையான ஐபிகளுக்கான வங்கி கேரண்டி, தகவல் பதிவு உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில் இவை நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்துள்ளார்.

Govt Relaxes Work From Home Rules For IT BPO Company Employees

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "இந்தியாவை தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தகவல் தொடர்புத் துறையின் பிற சேவை வழங்கும் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஐடி துறை நமது பெருமிதம் ஆகும். ஐடி துறையின் பங்களிப்பு உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. எனவே இந்தத் துறை சுமுகமாக வளர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "வீட்டில் இருந்து பணி செய்வதற்கு தேவைப்படும் பல்வேறு அனுமதிகள் மற்றும் செயல் முறைகளை அரசு நீக்கிவிட்டது. எனவே இனிமேல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்ப்பது மிகவும் எளிதாகி விடும்" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மத்திய அரசின் இந்த விதிமுறை தளர்வால் கொரோனா பாதிப்பு சரியான பின்பும் வீட்டில் இருந்து பணியாற்றுதலை பல நிறுவனங்கள் முன்னெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலக செலவு உள்ளிட்டவை குறையும், வாகனப் போக்குவரத்து மற்றும் அவற்றுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள சிரமங்கள் குறையும் என்பதால் பல ஐடி நிறுவனங்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுடைய ஊழியர்கள் வேலை பார்க்கலாம் என்ற விதிமுறையை நிரந்தரமாக கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசியுள்ள விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, "இது உண்மையிலேயே நீண்ட காலத்திற்கு பயனளிக்கக் கூடிய ஒரு முற்போக்கான சிந்தனையாகும். தொழில்நுட்பத் துறையை போட்டியில் இருக்கச் செய்யும் நடவடிக்கை இதுவாகும். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்பது இப்போது யதார்த்தம் ஆகிவிட்டது" என வரவேற்றுள்ளார். அதேநேரம் ஊழியர்களுக்கு இது உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தை கொடுக்கலாம் எனவும் மருத்துவர்கள் ஒருபுறம் கவலை தெரிவித்துள்ளனர். அதோடு குழு மனப்பான்மையிலும் பிரச்சனை வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்