'கொரோனாவால பெரிய அடி'... 'இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பாதிப்பால் அழகு சாதனப்பொருள் நிறுவனமான எஸ்டீ லாடர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அழகுசாதனத் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், பிரபல நிறுவனமான எஸ்டீ லாடர் பல ஆண்டு மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கடைகள் சிலவற்றை மூடி, வேலைகளையும் குறைத்து வருகிறது. அழகு சாதனப்பொருள் நிறுவனமான எஸ்டீ லாடர் உலகளவில் தனது பணியாளர்களில் 1,500 முதல் 2,000 பேர் அல்லது மொத்த ஊழியர்களில் சுமார் 3% வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புவதால் 10% முதல் 15% வரை கடைகளை மூடவும்,  சில டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் உள்ள கவுண்டர்களை அகற்றவும் திட்டமிட்டுள்ளது எஸ்டீ லாடர். அத்துடன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கு முதலீடு செய்வதற்கும் அந்நிறுவனம் சிறப்பாக தடம் அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் ஒப்பனைக்கான தேவை குறையத் தொடங்கி அந்தத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைள் பெரும் சேமிப்புக்கு வழிவகுக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் உடைகள் அதிகளவில் வாங்காவிட்டாலும் கூட, கண்ணிற்கான கிரீம்கள் மற்றும் சரும பராமரிப்பு கிரீம்களில் ஆர்வமுடன் இருப்பதால் புதிய நிதியாண்டில் எச்சரிக்கையான நம்பிக்கையுடன் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்