சீட்டிங் டிவைஸ் வைத்து காற்றை மாசுபடுத்திய கார் நிறுவனம்: ரூ.500 கோடி அபராதம்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்அனுமதிக்கப்பட்ட அளவினைத் தாண்டி காற்றினை மாசுபடுத்துவதாக பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வோகன் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் காற்று மாசடைதலுக்குக் காரணமாக இருந்ததாக வோக்ஸ்வோகன் காருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு அதனை இரண்டு நாளைக்குள் செலுத்த வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதனையடுத்து மீண்டும் இன்று வோக்ஸ்வோகன் கார் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வோக்ஸ்வோகன் நிறுவனத்தின் கார்கள் அனுமதிக்கப்பட்ட அளவினை மீறி நைட்ரஜன் டை ஆக்சைடு நச்சு வாயுவை வெளியேற்றுவதாக கூறி, இந்நிறுவனத்துக்கு ரூபாய் 500 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நச்சுப்புகையை வெளியேற்றி காற்றை மாசுபடுத்துவது மட்டுமல்லாது, இந்நிறுவனத்தின் டீசல் கார்களில், இவற்றை தெரியாமல் மறைப்பதற்கான சீட்டிங் டிவைஸ் ஒன்று வைக்கப்பட்டிருப்பதாகவும், அது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாலும் இத்தகைய அபராதம் விதிக்கப்படுவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அபராதத் தொகையை இரண்டு மாதத்திற்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
OTHER NEWS SHOTS