"தலைநகருக்கு உள்ள வந்துடுச்சு அந்த க்ரூப்.. தயாரா இருங்க"..உக்ரைன் அதிபருக்கு உளவுத்துறை அனுப்பிய சீக்ரட் மெசேஜ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் ரஷ்யா போரை துவங்கி இன்றோடு 15 நாட்கள் ஆகின்றன. ஐரோப்பிய யூனியனுடன் இணையும் உக்ரைனின் விருப்பத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா இறுதியாக பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக சுமார் 400 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 15 லட்சம் மக்கள் போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

கதறி கதறி அழுத சுட்டி குழந்தை....நொடியில் போட்ட குத்தாட்டம்! அம்மா செய்த வைரல் காரியம்.. Cute வீடியோ..!

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலன்ஸ்கியை கொல்ல ஒரு டசனுக்கும் அதிகமான குழுக்கள் முயற்சி செய்ததாகவும் உக்ரைன் புலனாய்வுத்துறை அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து இருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவரான மிகைல் பொடோல்யாக்," ரஷ்யாவின் நாச வேலையில் ஈடுபடும் குழுக்கள் கீவ் நகரத்துக்குள் நுழைந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்துவருகின்றன. இருப்பினும் உக்ரைனின் 'மிக சக்திவாய்ந்த புலனாய்வு மற்றும் எதிர் புலனாய்வு வலையமைப்பு' தாக்குதல் முயற்சிகளை முறியடித்தது மற்றும் கொலையாளிகள் அதிபரை அடைவதற்கு முன்பே தடுக்கப்பட்டனர்" என்றார்.

நம்பர் 1 டார்கெட்

"மேற்கு புலனாய்வு அமைப்புகள் கூறியபடி புதினின் நம்பர் 1 டார்கெட் ஜெலன்ஸ்கி தான்" எனக் குறிப்பிட்ட மிகைல், கடந்த வாரம் 3 கொலை முயற்சிகள் நடைபெற்றதாகவும் அவை கச்சிதமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேசிய அவர்," எங்களது நட்பு நாடுகள் ஜெலன்ஸ்கி மீது இரண்டு அல்லது மூன்று முறை தாக்குதல் நடைபெற்றதாக கூறிவருகின்றன. ஆனால், 10க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்று இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார்.

ரஷ்யாவின் மிக மோசமான வேக்னர் குழு மற்றும் செச்சன்யா பகுதியை சேர்ந்த பயங்கரவாத குழுவை ரஷ்யா அனுப்பி இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. இதனை ரஷ்யா மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை

மேலும், ரஷ்யாவின் ரகசிய பயங்கவாத குழுக்கள் உக்ரைன் தலைநகர் கீவ்-க்குள் ஊடுருவி இருப்பதாகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அதிபர் ஜெலஸ்கியை எச்சரித்து இருக்கிறது அந்நாட்டு புலனாய்வு அமைப்பு.

இந்நிலையில் உக்ரைன் அதிபரை கொலை செய்ய 10 க்கும் மேற்பட்ட முயற்சிகள் நடைபெற்று இருப்பதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்து இருப்பது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு படையில் இருந்து எஸ்கேப் ஆன வீரர்.."அத மட்டும் அவர் செஞ்சா அவ்ளோதான்".. கவலையில் பிரிட்டன்..!

UKRAINE, ZELENSKY, UKRAINE OFFICIALS, RUSSIA UKRAINE CRISIS, உக்ரைன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்