திடீரென முடங்கிப் போன 'யூ டியூப்'... 'உலகம்' முழுவதும் எழுந்த 'பரபரப்பு'... நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ தளமான யூ டியூப் சில மணி நேரத்திற்கு முன்பு திடீரென முடங்கிப் போனது.

அது மட்டுமில்லாமல் கூகுள் நிறுவனத்தின் செயலிகளான ஜி மெயில், கூகுள் டிரைவ், பிளே ஸ்டோர் உள்ளிட்டவையும் தற்போது தடைபட்டது. திடீரென ஏற்பட்ட இந்த முடக்கத்தின் காரணமாக,  உலகெங்கிலுமுள்ள மக்கள் கடும் அவதிக்குள் ஆகியுள்ளனர். மொபைல் போன் மட்டுமில்லாமல் கணினி மூலமாகவும் இந்த செயலிகளின் செயல்பாடு தடைபட்டது.

உலகம் முழுவதுமே இந்த பிரச்சனை திடீரென ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனைத்து செயலிகளும் பயன்பட ஆரம்பித்துள்ளது. இந்த முடக்கம் ஏற்பட்ட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் செய்லபட ஆரம்பித்த நிலையில், இந்த முடக்கம் ஏற்பட காரணம் என்ன என்பது சரிவர தெரியவில்லை.

இதன் காரணமாக, யூ டியூப் தொடர்பான சில ஹேஸ்டேக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி இருந்தது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து உலகெங்கிலுமுள்ள மக்கள் ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்