VIDEO: ‘கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல’!.. அதிபரின் கன்னத்தில் ‘பளாரென’ அறைந்த இளைஞர்.. பிரான்ஸில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரூனை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 57 லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரூன் (Emmanuel Macron) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது DROME மாகாணத்தில் மாணவர்களுடன் உரையாடினார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்களது அருகில் இமானுவல் மேக்ரூன் சென்றார். அப்போது கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் அதிபருக்கு கை கொடுக்க வந்தார். உடனே அதிபரும் அந்த இளைஞருக்கு கை கொடுத்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிபரின் கையை பிடித்துக்கொண்டு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். உடனே மற்றொரு இளைஞர் அதிபர் இமானுவல் மேக்ரூனுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனை அடுத்து அதிபரின் பாதுகாவலர்கள் உடனே அந்த இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஜனநாயகத்துக்கு அவமரியாதை என பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிபர் இமானுவல் மேக்ரூனை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்