ஊரடங்கில் ‘காதலியை’ பார்க்கபோய் போலீஸில் சிக்கிய வாலிபர்.. கோர்ட்டில் சொன்ன ஒரு ‘காரணம்’.. தண்டனை வழங்காமல் அனுப்பிய நீதிபதி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் மக்களும் மிக அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. மேலும் ஊரடங்கை மீறி காரணம் ஏதுமில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரிலேயா நாட்டின் பெர்த் நகரில் உள்ள ஓட்டலில் ஏராளமான நபர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஓட்டலில் தங்கியுள்ள ஜொனாதன் டேவிட் (35) என்ற வாலிபர் சுகாதார ஊழியர் மற்றும் போலீசாரை ஏமாற்றி விட்டு ஓட்டலில் இருந்து காதலியை பார்ப்பதற்காக வெளியே தப்பி சென்றுள்ளார். அப்போது வழியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஜொனாதன் சிக்கிக்கொண்டார்.

இதனை அடுத்து ஊரடங்கை மீறியதற்காக அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தான் உணவு வாங்குவதற்காக ஊரடங்கை மீறி வெளியே சென்றதாக நீதிபதியிடம் தெரித்தார். இதனால் அவருக்கு தண்டனை ஏதும் வழங்காமல் நீதிபதி எச்சரித்து அனுப்பினார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஓட்டலில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

இதைப் பார்த்த போலீசார் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தனது காதலியை பார்ப்பதற்காகதான் ஓட்டலில் இருந்து வெளியே வந்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்