சினிமா பாணியில்.. 11 மாதம் கோமாவில் இருந்து.. தற்போது மீண்ட இளைஞர்!.. ”கண் முழிச்சதும் இத பத்தி கேக்குறானே? எப்படி சொல்றது?” - தவிக்கும் உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி 11 மாதங்களாக கோமாவில் இருந்து தற்போது மீண்டிருக்கிறார்.

அண்மையில் பல வருடங்களாக கோமாவில் இருந்து எழுந்து நடப்பு உலகத்தில் நடப்பது எதுவுமே புரியாத கதாபாத்திரத்தை ஏற்று ஜெயம் ரவி கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தைப் போலவே ஒரு நிஜ சம்பவம் யுகேவில் உள்ள இளைஞர் ஒருவருக்கு நடந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் அந்த இளைஞருக்கு கொரோனா தொடர்பில் எதுவுமே தெரியவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பற்றி விளக்குவது என்று உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

பிரிட்டனின் Burton-ல் உள்ள Staffordshire என்கிற பகுதியில் மார்ச் 1-ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கிய 19 வயதான Joseph Flavill என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் மூன்று வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

ஆனால் அந்த சமயம் தான் மார்ச் 23,2020 அன்று முதல் பிரித்தானியாவில் முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து 11 மாத காலம் Joseph Flavill கோமாவில் இருந்தார். இதனிடையே அவருக்கு இருமுறை கொரோனா ஏற்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து Joseph Flavill குணமாகி உள்ளதுடன் கோமாவில் இருந்தும் மீண்டு இருக்கிறார்.

ஆனால் உலகமெங்கும் கொரோனா நோய் தொற்றினால் பல மில்லியன் மக்கள் மரணம் அடைந்திருப்பது; பாதிக்கப்பட்டிருப்பது என எதுவுமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவருடைய பெற்றோர் அவரை சந்திக்க அனுமதிக்கப் பட்டனர். ஆனால் உலக நாடுகளை இப்படி ஆட்டம் காட்டிய கொரோனா தொடர்பாக அவருக்கு எப்படி விளக்குவது என அவரது உறவினர்கள் சற்று குழப்பமாக இருந்து வருகின்றனர்.

ALSO READ: 'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்!.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்!’

எனினும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் தற்போது கொரோனாவில் இருந்தும், கோமாவில் இருந்தும் Joseph Flavill குணமடைந்து வருவதை பலரும் பாராட்டுகின்றனர். இதேபோல் இந்த கடுமையான காலத்தில் அவரை இதுவரை செவிலியர்கள் மிகவும் கவனமாகப் பராமரித்து வந்திருப்பதற்கு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்