'லைவ் போயிட்டு இருக்கு'...'நான் முதுகில் தான் தட்ட போனேன்', ஆனா'...அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்நேரலையில் செய்தி வழங்கி கொண்டிருந்த பெண் செய்தியாளரை போட்டியாளர் பின்னால் தட்டிய வீடியோ பலரையும் அதிர செய்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வை அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் கேமிராவின் முன் வந்தும், கைகளை நீட்டியும் சேட்டை செய்தனர். இருப்பினும் அலெக்ஸ் போஜார்ஜியன் சளைக்காமல் செய்தி வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது மாரத்தான் போட்டியில் ஓடி கொண்டிருந்த போட்டியாளர் ஒருவர் திடீரென போஜார்ஜியனின் பின்புறத்தை தட்டி சென்றார். இதனால் ஷாக்கான பெண் தொகுப்பாளர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். இதையடுத்து போட்டியாளரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தார்கள். மேலும் வீடியோவில் பதிவான அந்த போட்டியாளர் யார் என்பது குறித்து பின்னர் தெரியவந்தது.
பெண் செய்தியாளரை தட்டியவர் 43 வயதான டாமி கால்வே. இவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அமைச்சரை பலரும் கண்டித்தனர். சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த டாமி கால்வே, ''நான் அவரை முதுகில் தான் தொட்டேன். ஆனால் தவறுதலாக எங்கே பட்டது என்று தெரியவில்லை. எந்த தவறான நோக்கத்துடனும் நான் செயல்படவில்லை. தவறாக இருந்தால் அந்த பெண் செய்தியாளர் எனது மன்னிப்பை ஏற்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்