‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிள் நிறுவனம் தன் மீது தவறாக கேஸ் போட்டு கைது செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு 18 வயது வாலிபர் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஜெர்சி, மன்ஹட்டன் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களில் வெவ்வெறு சமயங்களில் ஐபோன்கள்  திருடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து நியூயார்க்கைச் சேர்ந்த 18 வயது உஸ்மான் பா எனும் இளைஞர் கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே மாதம் பாஸ்டன் நகர் ஸ்டோரில் 1,200 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு ஈடானவற்றை திருடியதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட உஸ்மான் பா, ஆப்பிள் ஸ்டோரின் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் ஃபேஸ் ரிக்கக்னிஷன் தொழில்நுட்பம் கொண்டு அடையாளம் காட்டப்பட்டு கைதானார்.

ஆனால் உஸ்மான் பா, சம்பவம் நடந்த அன்று, தான் மன்ஹட்டனில் இருந்ததாகக் கூறியுள்ளார். அதே சமயம் ஆப்பிளின் தொழில்நுட்பம் அவரை குற்றவாளியாக அடையாளம் காட்டியதற்கான காரணத்தையும் அவர் கூறினர். அதாவது புகைப்படம் இல்லாத ஒரு உரிமம் தொலைந்ததாகவும், அது ஒருவேளை திருடன் கையில் கிடைத்திருக்கலாம் என்றும், அந்தத் திருடன் இந்த திருட்டைச் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆக, இந்த குற்றத்துக்கு சம்மந்தமில்லாத தன்னை ஆப்பிள் ஸ்டோரின் face recognition தொழில்நுப்டம் கொண்டு குற்றவாளி பட்டம் கட்டி கைது செய்தது அநியாயம் என்றும் இதனால் தன் சுயமரியாதையை, தான் இழந்ததாகவும் கூறியவர் இந்த மன உளைச்சலால் ஆப்பிள் நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் ஆப்பிள் நிறுவனமோ இந்த  face recognition தொழில்நுப்டத்தை தாங்கள் பயன்படுத்துவதில்லை என்று திட்டவட்டமாக பதில் அளித்துள்ளது.

APPLE, CASE, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்