"அடுத்த ஜென்மத்துல சந்திப்போம்"... காதலிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளைஞர் ஒருவர் வந்த கார் விபத்துக்குள் சிக்கிய நிலையில், இதன் பின்னால் உள்ள காரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 

Advertising
>
Advertising

                                                                Images are subject to © copyright to their respective owners

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ் டைசன் (Alex Tyson). 19 வயதாகும் இவர் கடந்த சில மாதங்கள் முன்பாக, லங்காஷயர் அருகே அமைந்துள்ள சாம்லெஸ்பரி என்னும் பகுதியில் Ford Fiesta காரில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானதாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் காரை ஓட்டி வந்த இளைஞர் அலெக்ஸ் டைசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

காரணம் விபத்து அல்ல..

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியும் வந்தனர். அப்படி இருக்கையில் தான் மற்றொரு சம்பவமும் போலீசாருக்கு தெரிய வந்து அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன்படி அந்த இளைஞர் சுமார் 88 மைல் வேகத்தில் காரை இயக்கி வந்ததாகவும் அது மட்டுமில்லாமல் வேண்டுமென்றே தடையை குறிவைத்து மோதி விபத்தை ஏற்படுத்தி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனால் விபரீத முடிவை எடுத்து இளைஞர் அலெக்ஸ் டைசன் உயிரிழந்தது பற்றி தெரிய வந்த சூழலில், இதற்கான சில காரணங்கள் குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

பேசாத காதலி..

அதன்படி அலெக்ஸ் டைசன் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக தனது காதலிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். அதில், "நான் உன்னை காதலிக்கிறேன். அதனை எப்போதும் செய்வேன். நான் மோட்டார் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம், விடைபெறுகிறேன்" என குறிப்பிட்டு உருக்கமான மெசேஜ் ஒன்றை இறப்பதற்கு சில நேரம் முன்பு அனுப்பி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

மேலும் இந்த முடிவை அலெக்ஸ் டைசன் எடுப்பதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி ஒரு சில தினங்கள் முன்பாக காதலியுடன் அடிக்கடி அலெக்ஸ் சண்டை போட்டு வந்ததாகவும், விபத்து ஏற்படுத்துவதற்கு ஒரு நாள் முன்பு அவரது காதலியை தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில் தான் விபரீத முடிவை எடுத்து இளைஞர் உயிரிழந்துள்ளததாகவும் சொல்லப்படுகிறது.

மகனின் மரணம் குறித்து அலெக்ஸின் தந்தையும் சில உருக்கமான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். முதலில் இளைஞர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கருதப்பட்டு வந்து சூழலில் பின்னர் அவரே விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த தகவலும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

YOUTH, CAR ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்