லவ் பண்ற பொண்ணுங்கள உளவு பார்க்கும் 'டிடெக்டிவ்' வேலை!!.. லட்சத்தில் கொழிக்கும் 20 வயது 'யூத்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: 20 வயது இளைஞர் ஒருவர் பெண்களை நோட்டமிட்டு அவர்களுடனே ஊர் சுற்றி வாரம் ரூ1.48 லட்சம் சம்பாதித்து வருவதை கேட்டால் அசந்து போவீர்கள்.
தனக்கு பிடித்த பெண் நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்த பின்பும் காதலை சொல்ல தயக்கம் இருக்கிறது. நமக்கு பிடித்த பெண்ணை கண்டாலே கரன்ட் ஷாக் அடித்தது போல் உடம்பெல்லாம் வேர்த்து விடும். ஆனால் இங்கு ஒருவர் காதலி நல்லவரா கெட்டவரா என்பதை நடிகர் சந்தானம் பாணியில் டிடெக்டிவ் வேலை செய்தும் பணம் சம்பாதித்து வருகிறார் என்றால் நம்புவீர்களா. ஆனால் அதுதான் உண்மை.
அமெரிக்காவின் அலபாமா மாகாணம், யார்க்உட் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் லாக். 20 வயது இளைஞரான இவர் டிடெக்டவாக இருந்து ஒருவரின் காதலி அவருக்கு உண்மையாக இருக்கிறாரா அல்லது பொழுதுபோக்கிற்காக காதலிக்கிறாரா என்பதை கண்காணித்து பணம் சம்பாதித்து வரும் செய்தி வைரலாக பரவி வருகிறது.
இவரிடம் வரும் நபர்கள் அவர்களது காதலி குறித்த முழு தகவல்களையும் கொடுத்து செல்வார்கள். சேவியர் முதலில் அவர்களை வலைதளத்தில் பின் தொடர்வார். பின்பு அந்த பெண் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அவருடன் முகநூலில் நண்பராக அறிமுகம் செய்து கொண்டு சேட்டிங் செய்வார்.
"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்" மொமண்ட்!.. IPS அதிகாரியின் நெகழ்ச்சி செயல்! வீடியோ..
சமூகவலைதளத்தில் பெண்களுடன் ஷேட்டிங்
முதலில் அப்பெண் தன்னிடம் எப்படி பேசுகிறார், அவரது எண்ணங்கள் என்ன என்பதை தெரிந்துகொண்ட பிறகு, டிடெக்டிவ் சேவியர் அப்பெண்ணை நேரில் சந்தித்து பேச முயற்சிபப்பார். இருவரும் தனியாக சந்தித்து உரையாடும்போது தனது காதலனை பற்றி ஏதேனும் சொல்கிறாரா என்பதை கவனிப்பார், அப்படியும் அந்த பெண் சொல்லவில்லை என்றால் இவரே அந்த பெண்ணிடம் இதற்கு முன்பு யார் யாருடன் உறவில் இருந்தீர்கள் என்பதை சகசமாக நண்பரை போன்று கேட்டு தெரிந்துகொள்வார். அப்பெண் தற்போது தனது காதலனை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லையென்றால், அந்த பெண் அவரை உண்மையாக காதலிக்கவில்லை என்றும் அவரது நோக்கம் காதல் என்பதை சேவியர் ரிப்போர்ட் கொடுப்பார்.
எது உண்மையான காதல்
ஒரு பெண்ணிடம் பேசி பழகும்போது அந்த பெண் முகநூலிலோ அல்லது நேரில் சந்திக்கும்போது அவர் தனது காதலரின் பெயர்,அவர் மீதான காதலை விவரித்தால் அவர் உண்மையாக இருக்கிறார் என்று அந்த நபரிடம் தெரிவித்துவிடுவார். காதலர்களை கண்காணிக்க சேவியர் லாக் தனி கட்டணமே வசூலிக்கிறார்.
ஒரு நாள் இந்த பணியை செய்ய குறைந்த பட்சம் ரூ14 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.
அம்பானி வாங்கிய புது ஹோட்டல் - விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
சிலருக்கு இதை இலவசமாகவும், சிலருக்கு குறைந்த கட்டணத்திலும் செய்து தருகிறாராம். இவர் வாங்கிய குறைந்த பணம் ரூ744, அதிகபட்சமாக ஒருவர் தன் காதலியின் உண்மையை கண்டறிய இவருக்கு ரூ55 ஆயிரம் பணம் கொடுத்தாராம். இந்த தகவலை அவரே தற்போது டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தனக்கும் இதேபோன்று செய்ய வேண்டும் என ஒரு பட்டாளமே கியூவில் காத்திருக்கிறது. தற்போது இவர் ரூ1.48 லட்சம் சம்பாதித்துள்ளாராம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Arranged marriage-ல இருந்து காப்பாத்துங்க... பேனர் கட்டி பொண்ணு தேடும் இளைஞர்..!
- காதலியுடன் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான கடிதம்.. இறுதியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
- ப்ளீஸ், 'அவங்கள' தடுக்காதீங்க...! 'அப்படி' பண்ணக் கூடாதுன்னு 'எங்கையுமே' சொல்லல...! - தாலிபான்களிடம் 'வேண்டுகோள்' விடுத்த மலாலா...!
- 'பெண்கள் 'அந்த' விஷயத்துல ரொம்ப கஷ்டப்படுறாங்க'!.. வேற லெவலில் சிந்தித்த அரசு!.. அதிரடி அறிவிப்பால் வாயடைத்துப் போன உலக நாடுகள்!
- ‘அவங்க கோர முகம் கொஞ்சமும் மாறல’!.. ஆப்கான் இளம்பெண்ணுக்கு நடந்த சொல்ல முடியாத கொடுமை.. பெண் செய்தியாளர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!
- 'கண்ணுல கனவு... சாதிக்கணும்னு வெறி'!.. தாலிபான்கள் கண்ணில் மண்ணைத் தூவி... ஆப்கான் சிறுமிகளை போராடி மீட்ட அமெரிக்க தாய்!
- ”பொண்ணுங்களா...! அப்படி நான் என்ன சொல்லிட்டேன்...' அதுக்காக 'இப்படியா' பண்ணுவீங்க...?” - ‘தரமான சம்பவம்' செய்த பெண்கள்... காருக்குள்ளேயே கதறிய ‘கால் டேக்ஸி’ டிரைவர்...!
- 'பொதுக் கழிப்பிடத்துக்குள் இருந்து வந்த இளைஞரின் குரல்!'.. கதவை உடைத்து மீட்டதும் 'சிரித்துக் கொண்டே வெளிவந்த நபர்'.. நடந்த சம்பவம் இதுதான்!
- Video:‘ஓவர் ஸ்பீடில் ஓவர் டேக்!’.. ‘மின்னல் வேகத்தில் சேஸிங்!’.. ‘விடுதலை’ ஆகி தமிழகம் வரும் சசிகலா காரை மறித்த இளைஞரால் ‘பரபரப்பு!’.. வைரல் வீடியோ!
- ஆண்களை விட பெண்கள் கம்மியாதான் போன் யூஸ் பண்றாங்க.. என்ன காரணம்? ஆய்வில் வெளியான பரபரப்பு தகவல்..!