"எனக்கு போர்புரிய-லாம் தெரியாது.. என்னால முடிஞ்சது இதுதான்".. இணையவாசிகளை உருக வைத்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா - உக்ரைன் போர் உச்சமடைந்து வரும் நிலையில், பதுங்கு குழியில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர் வயலின் வாசித்து வருகிறார். இதற்கு அவர் கூறும் காரணம் தான் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது.

Advertising
>
Advertising

TN Budget 2022: உயர் கல்வி மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000.. ஆனா இவங்களுக்கு மட்டும் தான்!

போர்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போர் காரணமாக இதுவரையில் 600 பேர் கொல்லப்பட்டதாகவும் 1000ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது.

வான்வெளி தாக்குதலில் இறங்கியுள்ள ரஷ்ய ராணுவத்திடம் இருந்து தப்பிக்க, பதுங்கு குழிகளில் உக்ரைன் மக்கள் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-ல் உள்ள கட்டிடம் ஒன்றின் பேஸ்மெண்டில் தங்கி இருக்கிறார் இசை கலைஞரான வேரா லிடோவ்செங்கோ (Vera Lytovchenko). நித்தமும் குண்டுச் சத்தம் கேட்கும் நகரத்தில் பதுங்கி இருக்கும் வேரா, தனது வயலின் மூலமாக இன்னிசையை இசைத்து உடன் இருப்பவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்துவருகின்றனர்.

வலி நிவாரணி

விவால்டி மற்றும் உக்ரேனிய மெல்லிசைகளை இசைத்துவரும் வேரா இதுகுறித்து பேசுகையில்," இந்த கட்டிடத்தில் நாங்கள் 12 பேர் இருக்கிறோம். குழந்தைகள், இளம் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என்னோடு வசித்து வருகிறார்கள். போர் காரணமாக அவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். குண்டு விழும் அச்சத்திற்கு இடையே என்னுடைய இசை அவர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் என நம்புகிறேன். கவலையை மறந்து சிறிது நேரமாவது அவர்களை சமாதானப்படுத்த என் இசை உதவுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

நான் போர் வீரர் அல்ல

தனக்கு போர் குறித்து எதுவும் தெரியாது எனக் குறிப்பிடும் வேரா," நான் அரசியல்வாதியோ, மருத்துவரோ அல்லது போர் வீரரோ அல்ல. எனக்கு தெரிந்தது இது மட்டும் தான். இதன்மூலம் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன்" என உருக்கத்துடன் தெரிவித்தார்.

39 வயதான வேரா தன்னுடைய இசையின் மூலமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியும் வருகிறார். தன்னுடைய மாணவர் ஒருமுறை போர்களத்துக்கு நடுவே வயலின் வாசித்ததை நினைவுகூர்ந்த வேரா, அதுவே தனக்கு உந்து சக்தியாக இருந்ததாக தெரிவித்தார்.

ஆறுதல்

தன்னுடைய மாணவர்கள் மற்றும் சக இசை ஆசிரியர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இசை கருவிகளை மீட்டி, மக்களுக்கு ஆறுதல் அளித்து வருவதாக வேரா தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசுகையில்," நான் தங்கி இருக்கும் கட்டிடத்தில் இருப்பவர்கள் இப்போது உறவினர்கள் ஆகிவிட்டனர். சொந்த சகோதர சகோதரிகளை போல அவர்கள் பாசத்துடன் பழகிவருகின்றனர். என்னுடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

போரினால் மனதளவில் காயமடைந்துள்ள மக்களுக்கு தனது இசையின் மூலமாக ஆறுதல் அளித்துவரும் வேராவின் வீடியோவை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

 

ரஷ்யா போட்ட குண்டு..இருந்த சுவடே தெரியாமல் போன தியேட்டர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

 

YOUNG VIOLINIST, UKRAINE, PLAYS MUSIC, RUSSIA UKRAINE CRISISS, இளம்பெண், ரஷ்யா உக்ரைன் போர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்