'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா?'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க இளம் பெண் ஒருவரின் டிக்டாக் கணக்கினை, அந்நிறுவனம் முடக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெரோசா அசிஸ் என்கிற இளம் பெண், பெண்களின் ஒப்பனை அலங்காரம், அணிகலன்களைச் சூட்டிக்கொள்ளுதல் பற்றி 40 விநாடிகள் பேசியுள்ளார். இந்த வீடியோ டிக்டாக்கில் வலம் வந்ததை அடுத்து, இதனை  1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் பேசிய அப்பெண், சீனாவில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவது பற்றிய தன்னுடைய விமர்சனக் கருத்தினையும் முன்வைத்திருந்தார். இதனால் இவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டாரா என்கிற சர்ச்சை எழுந்தது.

இதனை அடுத்து, இதனை மறுத்துள்ள டிக்டாக் நிறுவனம்,  சீன விவகாரம் பற்றி அப்பெண் பேசியதால் அவரது டிக்டாக் கணக்கு முடக்கப்படவில்லை என்றும் அந்த பெண் தனது முந்தைய வீடியோவில் ஒசாமா பின்லேடனை பற்றி பேசியதாகவும், அதன் காரணமாகவே அவரது கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

TIKTOK, YOUTH, GIRL, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்