'70 வயது முதியவருடன் கல்யாணம்'... 'இதுக்காக தானே கல்யாணம் பண்ணீங்க'... 'நாக்கு மேல பல்ல போட்டு பேசிய நெட்டிசன்கள்'... இளம்பெண் சொன்ன நச் பதில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

70 வயது முதியவரைத் திருமணம் செய்த இளம்பெண்ணை நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்த நிலையில், அவர்களுக்கு எல்லாம் அந்த இளம்பெண் பதிலளித்துள்ளார்.

கம்போடியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீனாவைச் சேர்ந்த 70 வயது முதியவரான shi song bang என்பவரைக் கடந்த மாதம் திருமணம்  செய்து கொண்டார். பின்னர் அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்கள்.

அதிலும் சிலர், இவ்வளவு அழகான இளம்பெண் 70 வயது முதியவரைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் பணம் மட்டுமே. அந்த முதியவரின் பணத்திற்காக மட்டுமே அந்த பெண் திருமணம் செய்திருப்பார் என தங்கள் மனதில் தோன்றிய அனைத்தும் கமெண்ட்ஸ்களாக பதிவிட்டார்கள். இவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல எனவும், அந்த பெண் அவரை மயக்கி இருக்கலாம் எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்து மிகவும் மனம் வருந்திய அந்த பெண், ஒரு கட்டத்தில் தான் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும் சிலர் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் அந்த தம்பதியை அர்ச்சனை செய்து வந்தார்கள். இதற்கிடையே எதற்காகத் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என அந்த இளம்பெண் விளக்கமளித்துள்ளார்.

shi song வாழ்க்கையில் எல்லாமே தனது மனைவி தான், அதாவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உயிரே நானாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இதை ஆமோதித்துள்ள பல நெட்டிசன்கள், இது அவர்கள் இருவரின் வாழ்க்கை, அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை எனப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்