'செல்ஃபி' எடுத்தா மரணத் தண்டனையா? ஜாக்கிரதையா எடுங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பீச்சில் செல்ஃபி எடுத்தால் மரணத் தண்டனை என்று சர்வதேச மீடியாக்களில்  உலாவரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாவாசிகளின் சொர்க்கமான தாய்லாந்தின் புக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில், மாய் காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலாத் தளமான இந்தக் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.

இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக செல்ஃபி புகைப்படங்களை எடுக்கின்றனர். இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமான இறக்கையில் இருந்து வரும் காற்றால் இழுக்கப்பட்டு உயிரிழக்கவும் செய்துள்ளனர். இதனால் விமான நிலையம் முன்பு செல்ஃபி எடுக்க மாகாண அரசு தடைவிதித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தடையை மீறி செல்ஃபி எடுத்தால், அதிகபட்சமாக மரணத்தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள புக்கட் சர்வதேச விமானநிலைய மேலாளர் தானீ, 'செல்ஃபி எடுப்பது குற்றமல்ல. ஆனால், லேசர் கருவி மூலம் விமானிகளின் கவனத்தை திசைத் திருப்பி முயல்வது, ட்ரோன்ஸ் பறக்கவிட்டு பெரும் விபத்துகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும்' என்றுக் கூறியுள்ளார்.

SELFIE, THAILAND, MAIKHAO, BEACH, DEATHSENTENCE, TOURIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்