'எனக்கு நீங்க தான் முக்கியம்!'.. 'நாட்டையே கண் கலங்க வைத்த 9 வயது சிறுவனின் கடிதம்'!.. நேரலையில் தேம்பி தேம்பி அழுத செய்தி வாசிப்பாளர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு 9 வயது சிறுவனால், தன்னுடைய மழலை மொழி மூலம் ஒரு நாட்டையே கண் கலங்க வைக்க முடியுமா என்றால், 'ஆம்' என்று உறுதிபடுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க கடுமையான விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள் ஆவர். எனவே, அவர்களை கடுமையாக விமர்சித்தனர்.
இதில் முக்கியமாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்.பி.இ. பட்டம் பெற்ற மார்கஸ் ரஷ்ஃபோர்ட் தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளானார். இவர் பல மக்களுக்கு சேவைகள் செய்திருக்கிறார். எனவே, நாட்டில் உள்ள சிறுவர்கள் ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற 9 வயது சிறுவன், தான் ஹீரோவாக நினைக்கும் மார்கஸ் ரஷ்போர்ட்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த சிறுவனின் கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல பத்திரிகையாளர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.
அந்த கடிதத்தில் சிறுவன் எழுதியிருப்பதாவது, "டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள். நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படையச் செய்துள்ளீர்கள்.
உங்களை எண்ணி பெருமை அடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள். நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான்" என்று சிறுவன் எழுதி உள்ளார். இங்கிலாந்து நாட்டின் முகம் இச்சிறுவனின் கடிதத்தில் வெளிப்பட்டதாக செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண் கலங்கியதுடன், "இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம்" என சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
9 வயது சிறுவன் எழுதிய கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் சுசண்ணா ரெய்டு கண்ணீரை அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார்.
அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பரும் கண்கலங்கியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இத' சொல்றதுக்கு எனக்கு 'கஷ்டமா' தான் இருக்கு...! ஆனா 'நிலைமை' சரி இல்லையே...! கண்டிப்பா 'அத' பண்ணியாகணும்...! - பீட்டர்சன் கருத்து...!
- 'மேட்ச் நல்லா போயிட்டு இருந்தப்போ...' திடீரென 'கிரவுண்ட்ல' நடந்த 'அந்த' அதிர்ச்சி சம்பவம்...' - கண்ணீருடன் மைதானத்தை நோக்கி ஓடிய மனைவி...!
- VIDEO: யாருய்யா அது? பறந்து வந்து மைதானத்தில் விழுந்த நபர்.. தெறித்து ஓடிய வீரர்கள்.. நடுவர் செஞ்ச ‘அல்டிமேட்’ சம்பவம்..!
- 'ஸ்டூவர்ட் பிராட்-ஐ பாலியல் ரீதியாக விமர்சித்த ஆண்டர்சன்'!.. 'Delete பண்ணா கண்டுபிடிக்க முடியாதா'!?.. தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!
- ‘இங்கிலாந்து ப்ளேயர்ஸ் இப்போ இதுலதான் ரொம்ப பிஸியா இருப்பாங்க’!.. மீம்ஸ் போட்டு கலாய்த்த வாசிம் ஜாபர்..!
- ஸ்கெட்ச் போட்டு தூக்கும் இங்கிலாந்து!.. ராபின்சனை தொடர்ந்து... இனவெறி விவகாரத்தில் சிக்கிய மற்றொரு வீரர்!.. விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!
- 'இனி நமது எதிர்காலம் இப்படித் தான் தீர்மானிக்கப்படும்'!.. ஓலே ராபின்சன் நீக்கம் குறித்து... ரவிச்சந்திரன் அஷ்வின் நிலைப்பாடு என்ன?
- 'மன்னிப்பே கிடையாது'!.. 8 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறு!.. தோண்டி எடுத்த நிர்வாகம்!.. சாதனை நாயகன் அதிரடி நீக்கம்!
- 'அசாத்திய பவுலிங் திறமை இருந்தும்... அடுத்த போட்டிக்கு வாய்ப்பு இல்லை'!?.. கெஞ்சும் இளம் வீரர்!.. கொந்தளிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட்!
- இங்கிலாந்து டூர்... மும்பையில் தங்கியிருந்த இளம் வீரரை கழற்றிவிட்ட இந்திய அணி!.. ஆசை காட்டி மோசம் செய்ததா பிசிசிஐ?