‘ஆற்றை சுத்தம் செய்யப்போன 250 பள்ளி மாணவர்கள்’.. ‘திடீரென ஏற்பட்ட வெள்ளம்’.. 8 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆற்றை சுத்தம் செய்யும்போது திடீரென தண்ணீர் மட்டம் அதிகரித்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா யோக்யாகர்த்தா மாகாணத்தில் உள்ள பள்ளியில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ஆற்றை சுத்தம் செய்வதற்காக ஆசிரியர்களுடன் சென்றுள்ளனர். மாணவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத மாணவர்கள் ஆற்றைச் சுத்தம் செய்யும் வேலையில் மும்முறமாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருந்த ஆற்றுப் பகுதியில் திடீரென நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மாயமாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினர் ஆற்றில் சிக்கிய மற்ற மாணவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

SCHOOLSTUDENT, KILLED, YOGYAKARTA, INDONESIA, FLOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்