கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததை அடுத்து கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது.
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஏமன் நாட்டிலும் பரவியது. அந்நாட்டில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் என அச்சம் எழுந்தது.
கடந்த 10ம் தேதி ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயது அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு அதிகாரியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத நாடாக ஏமன் மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 1 கோடி மதிப்புள்ள 'பீர்' பாட்டில்கள வச்சுக்கிட்டு... எத்தனை நாளைக்கு இப்டி 'பயந்து' நடுங்குறது?
- மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!
- 'சென்னையில் ஒரே தெருவில்....' '11 பேருக்கு கொரோனா...' கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- 'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...
- 'கொரோனா' அச்சுறுத்தலால் 'தீவிர' கண்காணிப்பிற்காக... 'சீன' அரசின் 'அதிரடி' நடவடிக்கையால்... 'அதிர்ச்சியில்' மக்கள்...
- "55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!
- 'இந்த பெண் தான் காரணமா?'.. அக்டோபர் மாதம் உகானில் நடந்த விளையாட்டுப் போட்டி... சீனா வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. யார் இவர்?