'கடைசில எங்களையும் விட்டு வைக்கல'...'கொரோனாவின் கோரத்திற்கு இரையான சிறுவன்'...இனமே அழியும் ஆபத்து!
முகப்பு > செய்திகள் > உலகம்அமேசான் காட்டில் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி இன சிறுவன், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தசூழ்நிலையில் யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து ரோரைமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வெளி மனித தொடர்பு இல்லாமல் வசிக்கும் அமேசான் பழங்குடி மக்களை எப்படி கொரோனா தாக்கியது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. தற்போது பூர்வகுடிகளில் உள்ள ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரியாணி சாப்பிட அனுமதி மறுத்ததால்... மருத்துவமனையை சேதப்படுத்திய கொரோனா நோயாளி!'... கோவையில் பரபரப்பு!
- 'ஒருவரால் வந்த வினை!'... 'ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா!'... மாவட்டத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
- சென்னை ‘டிஎம்எஸ்’ வளாகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ‘கொரோனா’ தொற்று.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!
- ‘ஒரே நாள்ல இவ்ளோ பேர் பலியா..!’.. ஆடிப்போன ‘அமெரிக்கா’.. கதிகலங்க வைக்கும் கொரோனா..!
- ‘யார் வீட்ல தங்குறது?’.. ஊரடங்கால் 2 கல்யாணம் செய்தவருக்கு வந்த ‘சோதனை’.. சண்ட போட்ட ‘மனைவிகள்’.. கணவர் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
- ஊரடங்கை தளர்த்துவது 'இதற்குத்தான்' வழிவகுக்கும்... பகிரங்க 'எச்சரிக்கை' விடுத்த 'உலக' சுகாதார அமைப்பு!
- 'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!
- கொரோனாவால் 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்'... அவர்களின் குடும்பத்தினர் 'கண்டிப்பா' இதை பாலோ பண்ணனும்!
- உலகளவில் 'இதுவரை' கொரோனாவால்... 'உயிரிழப்பை' சந்திக்காத நாடுகள் இதுதான்!
- ஊரடங்கு நேரத்தில் 'கள்ளக்காதலியை' பார்க்க... 200 கிலோமீட்டர் 'பயணித்த' முதியவர்... ஹைலைட்டே காரில் ஒட்டியிருந்த 'ஸ்டிக்கர்' தான்!