'எங்க உதவி வேணுமா'?... 'நாங்க ஹெல்ப் பண்ண தயாரா இருக்கோம்'... சீன அதிபர் ஜி ஜின்பிங்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல உலக நாடுகள் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கடும் உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடுவதில் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கச் சீனா தயாராக உள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்கச் சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு உதவத் தயார் எனச் சீனா வெளியுறவுத்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்பேற்பட்ட டெக் மில்லியனர்!'.. ‘ரியாலிட்டி ஷோவில் இருந்து நீக்கப்பட்ட பின் நடந்தது என்ன?’.. பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!
- “நாங்க ரெடி!”.. 'உலக லெவல் அந்தர் பல்டி'!.. “இப்பவாச்சும் இந்த யோசனை வந்துச்சே!” - வரவேற்கும் இணையவாசிகள்!
- இப்படியே குத்தம் சொல்லிட்டு இருங்க... கடைசில உங்களுக்கு தான் 'ஆப்பு'...
- 'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா!
- சபாஷ் 'சீனா'... 'வைரஸ்' எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க... நாங்களும் 'ரெடியா' இருக்கோம்!
- அத மட்டும் 'நீங்க' செஞ்சா... எங்க பதிலடி 'வெறித்தனமா' இருக்கும்... மொதல்ல ஒங்க 'மக்களை' காப்பாத்துங்க!
- டைம் குடுத்து 'ஆப்பு' வைக்குறவங்களா நீங்க?... அசராமல் 'திருப்பி' அடித்த சீனா!
- கொரோனா 'விவகாரம்'... "என்னால இப்போ பேச முடியாதுப்பா"... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்!
- 'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...
- ஓடி ஒளியிற பழக்கம் எனக்குக் கிடையாது... 'பெய்ஜிங்' நகரில் நேரில் ஆய்வு செய்த சீன அதிபர்... விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த 'ஜிஜின்பிங்'