‘அப்பவே அவரு சொன்னதை கேட்டிருந்தால்’... ‘கொரோனா குறித்து எச்சரித்த இளம் மருத்துவரிடம்’... ‘இறுதியாக சீன அரசு எடுத்த முடிவு’!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே அந்த வைரஸ் குறித்து எச்சரித்த இளம் மருத்துவர் லீ வென்லியாங் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அதிதீவிரமாக பரவியநிலையில், தற்போது அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புகோரி இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
உலகம் எங்கும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தற்போது இவரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆம், இது தொடர்பாக உகான் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லீ வென்லியாங்தான் எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதவி செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.
அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். பலர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது. மக்களுக்காக உயிர் துறந்த ஹீரோ லீ வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம். இவரது குடும்பத்துக்கு தக்க இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளது.
சீனாவில் இருக்கும் உகான் மத்திய மருத்துவமனையில்தான் லீ வென்லியாங் என்ற 34 வயதான கண் மருத்துவர் வேலைப் பார்த்து வந்தார். இவர் அங்கு பணியாற்றும் போது கடந்த டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸை சோதித்த லீ வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்து, உடனடியாக மருத்துவர்கள் இருக்கும் வீ சாட் குரூப் ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். லீ வென்லியாங் அளித்த மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்து, சீன மருத்துவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, மக்களுக்கு இவர்தான் உண்மையை அறிவித்தார்.
ஆனால் கொரோனா வைரஸை முன்பே கண்டுபிடித்த இவரை சீன அரசு பாராட்டாமல், முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.
இதற்கிடையில் கொரோனா வேகமாக பரவ, கடந்த ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பாக, கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு லீ வென்லியாங் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிப்ரவரி 7-ம் தேதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை...." "என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது..." 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...
- 'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...
- 'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா? (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா?'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- மூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்!
- இந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...
- ‘13 நாளா புதுசா யாருமே அட்மிட் ஆகல’.. வீட்டுக்கு திரும்பும் மருத்துவர்கள்.. சீனாவின் தற்போதைய நிலை என்ன..?
- “எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
- ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
- 'கொரோனா'வுல இருந்து நம்மள காப்பாத்திட்டு இருக்காங்க ... இவங்க தான் ரியல் ஹீரோக்கள் ... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #CoronaFighters!