'கொரோனா' வைரசால்... 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'எரிக்கப்பட்டு' இருக்கலாம்?... 'ஷாக்' கொடுக்கும் பிரபல கோடீஸ்வரர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரசால் இதுவரை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எரிக்கப்பட்டு இருக்கலாம் என, பிரபல கோடீஸ்வரர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா வைரசால் தற்போது வரை, 908 பேர் உயிரிழந்துள்ளனர்.  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்  என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் சுமார் 28 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சீன கோடீஸ்வரர் குவோ வெங்கூய் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது,'' எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கிய வுகான் நகரில் இருந்து இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ள நிலையில் குவோவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்