"கணவரை கொலை செய்வது எப்படி..?" புத்தகம் எழுதிய 71 வயது பெண்மணிக்கு 25 வருடம் சிறை தண்டனை.. என்ன நடந்தது.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

"கணவரை கொலை செய்வது எப்படி.?" என்கிற புத்தகத்தை எழுதிய அமெரிக்க பெண் ஒருவருக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

ஒருவர் எப்படி வேணாலும் புத்தகம் எழுதுவதற்கு உரிமை உண்டு எனும் போது, கருத்து சுதந்திரம் இருக்கும்போது, இப்படியான ஒரு புத்தகத்தை ஒருவர் கற்பனையாக எழுதியதாக கூட செல்ல முடியும். அப்படியானால் இப்படி ஒரு புத்தகத்தை எழுதியதற்காகதான் இந்த பெண்மணிக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறதா.? என்றால் கண்டிப்பாக இல்லை. உண்மையிலேயே தனது கணவரை கொலை செய்த குற்றத்திற்காகதான் இந்த பெண்மணி இந்த தண்டனை பெற்றார் என்பதே இந்த விவகாரத்தில் இருக்கும் உண்மை பின்னணி. 

71 வயது நிரம்பிய நான்சி கிராம்ப்டன் ப்ரோபி (Nancy Crampton Brophy)  எனும் பெண்மணிக்குதான், இப்போது 25 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான ஓரிகானில் இருக்கும் நீதிபதி ஒருவர்தான் இந்த பெண்மணிக்கு இப்படி ஒரு தண்டனை விதித்திருக்கிறார். சுமார் ஒரு மாதம் நடந்து வந்திருக்கும் இந்த வழக்கு விசாரணையை அடுத்து தன்னுடைய நான்சி கிராம்ப்டன் ப்ரோபி கணவரை எதற்காக கொன்றார் என்கிற விபரங்கள் தெரிய வந்திருக்கின்றன.

அதன்படி கணவரது பெயரில் இருக்கும் அவருடைய ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காகவே தன்னுடைய கணவர் டேனியல் ப்ரோபியை (Daniel Brophy), நான்சி கிராம்ப்டன் ப்ரோபி கொலை செய்திருக்கிறார் என்பதுதான் இந்த விசாரணை மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை. அதுமட்டுமன்றி கணவரை கொல்வதற்காக நான்சி கிராம்ப்டன் ப்ரோபி, ஆன்லைன் தளத்திலிருந்து துப்பாக்கியை வாங்கி பயன்படுத்தியதாகவும், ஆனால் தன்னுடைய புதிய நாவலுக்கான ஆராய்ச்சிக்காக இந்த துப்பாக்கியை வாங்கியதாக அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவர் பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் போலீசார் தரப்பிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், டேனியல் ப்ரோபி, தான் பணியாற்றிய சமையல் நிறுவன அறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இப்போது அந்த சமையல் நிறுவனம் தற்போது செயல்படாத நிலையில் இருக்கிறது, எனினும் டேனியல் ப்ரோபியின் இறப்புக்கு பின் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு விசாரணையை தொடங்கினர்.

பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, டேனியல் ப்ரோபி இரண்டுமுறை  செய்யப்பட்டிருக்கிறார். தவிர, அவர் கொல்லப்பட்டபோது அவருடைய மனைவி அப்பகுதியில் வாகனம் ஓட்டக் கூடிய காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியது. ஆனால் விசாரணையின்போது, “குற்றம் நடந்த இடத்தில் ஒரு புதிய பிக்‌ஷன் கதைக்கான உத்வேகத்தில், சம்பவ இடத்துக்கு அருகில் சென்று வந்து இருப்பேன்”  என்று நான்சி சொல்லி இருக்கிறார். ஆயினும் தன் கணவரை கொல்ல தனக்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.

HOW TO MURDER YOUR HUSBAND, NANCY CRAMPTON BROPHY, DANIEL BROPHY, கணவரை கொலை செய்வது எப்படி.?

மற்ற செய்திகள்