'கொரோனா' பாதிப்பால்... 'இரண்டரை கோடி' மக்கள் 'வேலையிழக்க' வாய்ப்பு... 'எச்சரிக்கை' விடுக்கும் 'ஐ.நா'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலை இழக்க நேரிடும் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பீதியால் பெரும்பாலான நாடுகளின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும் ரயில், பேருந்து, டாக்சி உள்ளிட்ட சேவைகளும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. இதனால் போக்குவரத்து நெருக்கம் மிகுந்த நகரங்கள் கூட வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் பெருமளவில் தொழில்முடக்கம் ஏற்பட்டு சராசரியான பணப்பறிமாற்றம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வருமானம் சுருங்கிப் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கை வெகுவாக குறைய வாப்பிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனா மருந்து வெறும் 500 ரூபாய் தான்..." 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...
- "எது... கொரோனா பள்ளமா?..." "ஒரு வைரஸ்ன்னு கூட பாக்காமா..." "பேரு வச்சு விளையாடுறீங்களே..." "மனசாட்சி இல்லையா உங்களுக்கு..."
- "நீங்க தொட்டாலே போதும்..." "நொடியில் தொற்றிக் கொள்ளும்..." "பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்..." 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...
- 'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது?... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது?... 'விவரங்கள் உள்ளே...'
- 'இப்போ நான் ஃபேமஸ் ஆயிட்டேன்...' 'எல்லாரும் கடை முன்னாடி நின்னு செல்ஃபி எடுக்குறாங்க...' பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த கொரோனா டெக்ஸ்டைல்ஸ்...!
- "மருந்து கண்டுபிடித்து விட்டோம்..." "இது கொரோனாவில் 7வது வகை வைரஸ்..." "முதல் 6 வகைக்கு நாங்கள் தான் மருந்து கண்டுபிடித்தோம்..." 'ஹாலந்து' விஞ்ஞானிகள் 'சாதனை' ...
- 'கொரோனா' 'தடுப்பூசி' முதன் முறையாக.... '43 வயது' பெண்ணுக்கு 'செலுத்தப்பட்டது'... 'முடிவுக்காக' காத்துக் கொண்டிருக்கும் 'உலகம்'...
- 'வஞ்சிரம் மீன்' வாங்க 'பேங்க்'ல லோன் எடுக்கணும் போல'... 'கொரோனா'வால் விண்ணுக்கு பறந்த விலை!
- 'கொரோனா' தடுப்பு மருந்தை 'சொந்தம்' கொண்டாடும் 'அமெரிக்கா'... 'கடுப்பான ஜெர்மனி'....'ஒட்டு மொத்த' உலகத்துக்கும் 'வழங்க' முடிவு...
- "ஊரே காலியா இருக்கு..." "ஆனா 'துப்பாக்கி' வாங்க 'வரிசை கட்டி' நிக்கிறாங்க..." "எதுக்குத் தெரியுமா?..."