'6 மாதத்தில் பிறந்த குழந்தை'... 'தயங்கி தயங்கி மருத்துவர் சொன்ன விஷயம்'... 'நிலைகுலைந்த பெற்றோர்'... ஆனா அடித்து தும்சம் செய்த அதிசய குழந்தை!
முகப்பு > செய்திகள் > உலகம்ரிச்சர்ட்டின் எடை பிறக்கும்போது சுமார் 330 கிராம் மட்டுமே இருந்தது.
வாழ்க்கையில் சில விஷயங்கள் மனிதன் கணிப்பதற்கு அப்பாற்பட்டது. அதுபோன்று நடக்கும் சம்பவங்கள் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிறந்த குழந்தை தான் ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன்.
ரிச்சர்ட்டின் தாயாருக்கு சில மருத்துவ சிக்கல் ஏற்பட்ட நிலையில் பிரசவத்துக்கு 131 நாள்களுக்கு முன்பே ரிச்சர்ட் பிறந்தான். இதனால் குழந்தை எப்படி வளரப் போகிறானோ என்ற கவலை அவர்களது பெற்றோருக்கு அதிகமாக இருந்தது. அப்போது, ரிச்சர்ட்டின் எடை சுமார் 330 கிராம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் ரிச்சர்ட்டின் பெற்றோரை அழைத்த மருத்துவர், உங்கள் மகன் பிழைக்க வாய்ப்பே இல்லை என்பதைக் கூறியுள்ளார்.
மகனை ஆசை ஆசையாக வளர்க்க வேண்டும் என கோட்டை கட்டிய பெற்றோரின் கனவு இடிந்து போனது. இருந்தாலும் மகனை முடிந்த வரை காப்பாற்ற முயற்சி செய்யலாம் என ரிச்சர்ட்டின் பெற்றோர் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது மருத்துவமனையிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளான் ரிச்சர்ட்.
அதோடு ரிச்சர்ட் பிழைக்கவே வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில், கடந்த 5ஆம் தேதியன்று, ரிச்சர்ட்டின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது பிறந்த நாள் கேக்கை ரிச்சர்ட் ரசித்துச் சாப்பிட்ட காட்சிகள் பலரையும் நெகிழவைத்தது. அதோடு அமெரிக்காவில் குறைப்பிரசவத்தில் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தை எனும் கின்னஸ் சாதனையை ரிச்சர்ட் படைத்துள்ளான்.
மற்ற செய்திகள்