1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதன்முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திக்கு அடித்த ஜாக்பாட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் இணையம் உதவியோடு உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதை உட்காந்த இடத்தில் நம்மால் பார்க்க முடியும். இப்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகள் காரணமாக குறுந்தகவல் சேவையான எஸ்எம்எஸ் கிட்டத்தட்ட பலருக்கும் மறந்துவிட்டது.
ஒரு நாளைக்கு இருக்கும் 100 எஸ். எம். எஸ்ஸை எண்ணி எண்ணி பலருக்கு அனுப்பிய காலகட்டம் உண்டு. ஆனால், இந்த குறுஞ்செய்தியை முதல் முதலில் அனுப்பி 30 வருடங்கள் ஆகிறதாம்.
1992-ஆம் ஆண்டு வோடஃபோனின் பிரிட்டிஷ் ஊழியர் ஒருவரால் 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற குறுஞ்செய்தி தான் உலகிலேயே முதன்முதலில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. அனுப்பியவரின் பெயர் நீல் பாப்வொர்த்.
புரோகிராமரான நீல் பாப்வொர்த் தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற 14 எழுத்துக்கள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். நீல் இதனை தனது ஆர்பிட்டல் 901 மொபைல் (Orbital 901 Mobile Handset) கைபேசியில் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அந்த எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
201-ஆம் ஆண்டு நீல் இதுக்குறித்து ஒருமுறை பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதில், '1992-ல் இந்த எஸ்எம்எஸ் அனுப்பிய போது இந்த எஸ்எம்எஸ் இவ்வளவு பிரபலமாகும் என்று எனக்கு தெரியாது. நான் இதுக்குறித்து என் குழந்தைகளிடமும் கூறியிருந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' குறுஞ்செய்தியின் டிஜிட்டல் நகலை தற்போது ஏலம் விட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்ற குறுஞ்செய்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
மேலும், ஏலத்தில் கிடைக்கும் வருமானம் UNHCR-UN Refugee Agencyக்கு வழங்கப்படும் எனவும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கட்டுக்கட்டா பணத்துடன் 'பார்க்'கில் சுற்றி வந்த இளைஞர்...! இவ்ளோ பணம் 'எப்படிங்க' உங்க கையில வந்துச்சு...? - அதிர்ச்சி சம்பவம்...!
- காலையில 'கண்ணு' முழிக்கிறப்போ அவர் ஒரு 'டிரைவர்' மட்டும் தான்...! 'ஆனா மதியம் கோடீஸ்வரர் ஆயிட்டார்...' - வெறும் 270 ரூபாய்ல 'எப்படி' இது சாத்தியமாச்சு...?
- சத்தியமா நீங்க 'இப்படி' பண்ணுவீங்கனு எதிர்பார்க்கல...! பொறுப்புள்ள 'பதவியில' இருக்குறவர் பண்ணுற 'வேலையா' இது...? - 'வாட்ஸ்அப்' பார்த்து அதிர்ந்துப் போன பெண் நிருபர்...!
- 'செல்போனில் வந்த ஒரு மெசேஜ்...' என்னங்க சொல்றீங்க...! 'அவர் இறந்துப்போய் 10 வருஷம் ஆச்சுங்க...' - என்ன நடக்குது என புரியாமல் குழம்பி போன குடும்பம்...!
- அடேங்கப்பா..! 18 கோடிக்கு ஏலம் போன டுவிட்டர் சிஇஓ-ன் ‘முதல்’ ட்வீட்.. அப்படி என்ன பதிவிட்டு இருந்தார்..?
- ‘ரூ.510 கோடிக்கு ஏலம் போன மதுபானக்கடை’!.. இந்த ஏலத்தை கேட்டது யாரு? இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க காரணம் என்னன்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
- 'இந்த சீசனே நிலைமை ஒன்னும் சரியில்ல!!!'... 'வீரர்களுக்கு ஷாக் கொடுத்து'... 'அணிகள் எடுக்குப்போகும் அதிரடி முடிவு?!!'...
- 'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா!'.. அன்றே சொன்ன தல தோனி!.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்!.. என்ன நடந்தது?
- வீட்டிலிருந்து திடீரென மாயமான 2 ‘இளம்பெண்கள்’.. வாட்ஸ் அப்புக்கு வந்த ஒரே ஒரு ‘மெசேஜ்’.. ஆடிப்போன பெற்றோர்கள்..!
- 'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...