'இந்த பையனை மறக்க முடியுமா'?... 'தம்பி நீயா பா இது'... 'ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிறுவன்'... வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலேயே அதிக பருமனான சிறுவன் தற்போது எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளான்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த சிறுவன் Arya Permana. 11 வயதில் கிட்டத்தட்ட 190 கிலோ இருந்த இந்த சிறுவன் தான் உலகிலேயே அதிக பருமனான சிறுவன் ஆவான். தற்போது 14 வயதாகவும் Arya, பாதிக்கும் மேல் தனது எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளான்.

எப்போது பார்த்தாலும் நொறுக்குத் தீனி சாப்பிடுவது, மற்றும் அதிகப்படியான உடல் சூடு காரணமாகத் தண்ணீர் தொட்டிக்குள் எப்போதும் படுத்துக் கொள்வது எனத் தினசரி வாழ்க்கையைக் கழித்து வந்துள்ளான். இந்நிலையில் உடல் எடை காரணமாக அவனால் பள்ளிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே தனது கிராமத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் உடல் சூட்டைக் குறைக்க Arya படுக்கவைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்தே போனார்கள்.

இதனையடுத்து Aryaவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் Aryaவின் இரைப்பையின்  அளவை குறைத்தனர். இதனால் Arya உணவு எடுத்துக் கொள்ளும் அளவானது குறைந்தது. இதையடுத்து மூன்றே வாரங்களில் Aryaவின் உடல் எடை 186 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது. அதன்பிறகு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை 82 கிலோவாக Arya குறைந்துள்ளான்.

இப்போது மற்ற சிறுவர்கள் போல மரம் ஏறுகிறான், ஏன் மோட்டார் சைக்கிள் கூட Arya ஓட்டுகிறான். கூடைப்பந்து விளையாட்டில் தன்னை ஈடுபடுத்தி அதில் ஆர்வம் காட்டும் Arya, தினமும் நடைப்பயிற்சி செய்வதோடு பள்ளிக்குக் கூட நடந்து போக ஆரம்பித்து விட்டான்.

அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைக்கப்பட்டாலும், Aryaவின் கடுமையான உடற்பயிற்சி மற்றும் சுய கட்டுப்பாடு காரணமாகவே அவனால் இந்த நிலைக்கு வர முடிந்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே 82 கிலோ எடைக்கு வந்துள்ள Aryaவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்