'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகளில் கொரோனா வைரசின் வேகம் முன்னிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வரை 5 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, நான்கே நாட்களில் 7 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 199 நாடுகளை தாக்கியுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா உச்சபட்ச கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் அமெரிக்கர் ஆவர். இதில் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோன பிரிட்டனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 288 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் சுமார் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'
- ‘அப்பா இறந்துட்டாரு’!.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- ‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி?’...
- 'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்!
- 'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
- '60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி!'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு!!
- 'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?
- '1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
- சென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்!
- ‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது! மத்திய உள்துறை அமைச்சகம்!