உலகிலேயே எடை குறைந்த குழந்தைக்கு மருத்துவத்தில் நிகழ்ந்த இன்னொரு அதிசயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிகவும் எடை குறைவான, அதாவது 245 கிராம் மட்டும் எடை கொண்ட  குழந்தை ஒன்று கடந்த டிசம்பர் 2018-ல் பிறந்தது. தாயின் கருவில் 23 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் வளர்ந்த இந்த பெண் குழந்தைதான் உலகிலேயே மிகவும் எடை குறைவான குழந்தை.

தொடர்ந்து 5 மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு பெற்ற இந்த குழந்தை, முன்னதாக பிழைப்பதே சிரமமாக இருந்த நிலையில், தற்போதுதான் உடல்நிலை தேறிவிட்டதாகவும், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லலாம்  என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

செய்பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை கருவில் இருக்கும்போது, குழந்தையின் வளர்ச்சிக்குறைபாட்டால் தாய்க்கு ஆபத்து உண்டாகும் சூழல் ஏற்பட்டதுமே, குழந்தை முழுவளர்ச்சி பெறும் முன்னரே பிரசவம் நிகழ்ந்தது. நுரையீரல் வளர்ச்சியடையாததால், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட இந்த குழந்தையை தொடக்கத்தில் செவிலியர்கள் பார்க்கவே கூசும் அளவுக்கு மிகவும் எடை குறைந்ததாக இருந்துள்ளாள்.

தற்போது உலகிலேயே எடை குறைந்த இந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது மருத்துவ உலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

NEWBORN, BABY, MIRACLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்