உலகின் மிக உயரமான பெண்மணிக்கு மேலும் 3 கின்னஸ் விருது.. இவங்க இப்படி வளர்றதுக்கு இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக உயரமான பெண்மணி தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இறந்துட்டார்னு மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. பெட்டியை திறந்த ஊழியருக்கு காத்திருந்த ஷாக்..!

உலகின் மிக உயரமான பெண்

துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேஸ்யா கெல்கி தான் சமகாலத்தில் வாழும் பெண்களிலேயே மிகவும் உயரமானவர். 7 அடி 07 அங்குலம் உயரம் கொண்ட இவருக்கு உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் அமைப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சான்றிதழை  வழங்கியது. அதேபோல கடந்த 2014 ஆம் ஆண்டு, சமகாலத்தில் வாழும் இளம்பெண்களிலேயே மிக உயரமானவர் என்ற கின்னஸ் சாதனையையும் கெல்கி படைத்திருந்தார். இந்நிலையில் கெல்கிக்கு மேலும் மூன்று கின்னஸ் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

மேலும் 3 சாதனைகள்

கெல்கியின் கைகள், விரல்கள் மற்றும் முதுகு ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் 3 சான்றிதழ்களை வழங்கியுள்ளது கின்னஸ் நிர்வாகம். அவரது நீளமான விரல் 4.4 அங்குலங்கள், வலது கை 9.81 அங்குலங்கள், இடது கை 9.55 அங்குலங்கள் இருப்பதாகவும் இது தற்போது வாழும் பெண்களின் கைகளிலேயே மிகப்பெரியது எனவும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், அவரது முதுகு 23.58 அங்குலங்கள் இருப்பதாக கின்னஸ் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆக விரல்கள், கைகள் மற்றும் முதுகு ஆகியவற்றின் அளவுகளின் மூலம் தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் கெல்கி.

வீவர் சிண்ட்ரோம்

ருமேஸ்யா கெல்கிக்கு வீவர் சிண்ட்ரோம் என்னும் அரியவகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவரது உடல் தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. பெரிதான தலை, மாறுபட்ட அறிவுசார் இயலாமை மற்றும் வித்தியாசமான முக அமைப்பு ஆகியவற்றை இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த பாதிப்பு காரணமாக வீல் சேரில் பயணித்துவரும் கெல்கி, உலோக ஊன்றுகோல் உதவியுடன் தினந்தோறும் நடைப்பயிற்சியும் மேற்கொண்டுவருகிறார். இதுகுறித்து பேசிய அவர்," நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்" என்றார்.

சமகாலத்தில் வாழும் பெண்களிலேயே கெல்கி தான் உயரமானவர் என்றாலும் வரலாற்றில் அவருக்கு முன்பாகவே உயரமான பெண்மணி இருந்திருக்கிறார். சீனாவின் ஜெங் ஜின்லியன் என்னும் பெண்மணிதான் வரலாற்றில் மிக உயரமான பெண்மணியாவார். 1982 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்ததற்கு சில மாதங்களுக்கு முன்பாக அவர் 8 அடி 1 அங்குலம் இருந்ததாக கின்னஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WORLD TALLEST WOMAN, GUINNESS WORLD RECORDS, உயரமான பெண்மணி, கின்னஸ் விருது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்