என்ன கல்யாணம் பண்ண போற பொண்ணு எங்கே? ஜோடியை தேடி நாடு விட்டு நாடு சென்ற உலகின் உயர்ந்த மனிதர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகத்தின் மிக உயரமான மனிதர் தன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு தாயை தேடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இன்றைய காலக்கட்டத்தில் சாதாரண மனிதருக்கே பெண் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் உலகின் மிக உயரமான மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் மார்டின் நகரை சேர்ந்த 39 வயதான சுல்தான் கோசென் என்கிற விவசாயி.

உயர்ந்த மனிதர்:

இவரது உயரம் 8"3 அடி ஆகும். சுமார் 251 செ.மீ உயரம் கொண்டவர். சிறு வயதில் கோசெனுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இவர் ஜைஜாண்டிசம் என்கிற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹார்மோன்கள் அதிக அளவில் உடலில் சுரந்து இவரை மிக உயரமான மனிதராக மாற்றியுள்ளது.

திருமணம்:

அதோடு கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியா நாட்டு சேர்ந்த மேர்வ் டிபோ என்கிற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். அவரின் உயரம் 175 செ.மீ (5’9”). கோசெனுக்கு துருக்கி மொழி மட்டுமே தெரியும். அவரின் மனைவி மேர்வ் டிபோக்கு அரபி மொழி மட்டுமே தெரியும். இருப்பினும் சில வருடங்கள் இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

முதல் மனைவி விவாகரத்து:

திருமணம் முடிந்து வருடங்கள் பல சென்றிருந்தாலும் இருவருக்கும் இடையில் பெரிய சிக்கலாக இருந்ததே மொழி பிரச்சினை தான். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் சுல்தான் கோசென் தனது மகனையும், மகளையும் பார்த்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

ரஷ்யா பெண்கள்:

இதன் காரணமாக சுல்தான் கோசென் நல்லா மணப்பெண் ஒருவரை தேடி வருகிறார். கொசேன் ரஷ்யா நாட்டு பெண்கள் அன்பிலும் அழகிலும் சிறந்தவர்கள் என்பதால் அவர்களில் இருந்து ஒருவரை தனக்கான மணப்பெண்ணாக தேர்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

நல்ல நல்ல அம்மாவை தேடுகிறேன்:

இதுகுறித்து கூறிய சுல்தான் கோசென், 'நான் திருமணம் செய்யும் பெண் மகனையும், மகளையும் நன்றாக பார்த்து கொண்டால் மட்டும் போதும். நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை துருக்கி நாட்டிற்கு அழைத்து சென்று, அங்கையே தங்களது வாழ்கையை தொடங்க உள்ளேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் கோசென் பார்த்து கொள்வேன்' எனக் கூறியுள்ளார்.

TALLEST MAN, RUSSIA, LIFE PARTNER, உயரமான மனிதர், ரஷ்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்