800 கோடியை தொட்டது உலக மக்கள் தொகை.. ஐக்கிய நாடுகள் அவை தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

சமகால சூழலில் உலகின் பல நாடுகள் அதிகரித்துவரும் மக்கள் தொகையினால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும், 2080 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் ஐநா கணித்திருக்கிறது.

1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. அதனுடன் இந்த நிலையை ஒப்பிடும்போது, உலக மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் கருவுறுதலில் ஏற்பட்ட சரிவு காரணமாக 2050 ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகை சதவீதம் 0.5 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என ஐநா தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், 2080 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடி என்ற இலக்கை எட்டும் என ஐநா கணித்திருக்கிறது. மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகளில் இருந்துதான் வரபோகிறது என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் இருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் எனவும் சொல்லப்படுகிறது.

உலக மக்கள்தொகை அதிகரித்திருப்பதை பன்முக தன்மை மற்றும் முன்னேற்றங்களை கொண்டாடும் தருணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் ம்னித குலத்திற்கான பொறுப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்ரேஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி பேசிய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம், "நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை கண்டு அச்சப்பட காரணம் ஏதுமில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

POPULATION, WORLD, UN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்