இனி இவங்கதான் உலகத்தின் அதிக வயதுடைய பெண்மணி.. கின்னஸ் நிர்வாகம் அறிவிப்பு..யார் இந்த சிஸ்டர் ஆன்ட்ரே?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக அதிக வயதுடைய பெண்மணி என்று கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா  உயிரிழந்ததை அடுத்து பிரான்ஸைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் தற்போது உலகின் மிக அதிக வயதுடைய நபர் என கின்னஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம்..டொனால்டு ட்ரம்ப்-க்கு செக் வச்ச கோர்ட்.... ஓ இதான் காரணமா?

கேன் டனாகா

ஜப்பானின் தென் மேற்கு பிராந்தியமான ஃபுகோகா பகுதியை சேர்ந்தவர் கேன். இவர் 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பிறந்தார். இதே வருடத்தில் ரைட் சகோதரர்கள் முதன் முதலில் தாங்களே வடிவமைத்த விமானத்தில் பறந்தனர். அதேபோல மேரி மேரி க்யூரி நோபல் பரிசை வென்று சாதனை படைத்ததும் இதே வருடம் தான். வரலாற்றில் நிலைபெற்ற சாதனைகளை தற்காலத்தோடு இணைக்கும் பாலமாக இருந்த கேன் கடந்த வாரம் தன்னுடைய 119 ஆவது வயதில் மரணம் அடைந்திருக்கிறார்.

கின்னஸ் அமைப்பு

சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களில் மிக அதிக வயதுடைய நபராக கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா  உயிரிழந்ததை அடுத்து பிரான்ஸைச் சேர்ந்த சிஸ்டர் ஆன்ட்ரே என்பவர் தான் சமகாலத்தில் வாழ்ந்துவரும் மிக அதிக வயதுடைய நபராக அறிவித்துள்ளது கின்னஸ் நிர்வாகம்.

1904 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிரான்சில் பிறந்தவர் லுசில் ராண்டன். பின்னர் கன்னியாஸ்திரியாக மாறிய பின்னர் தனது பெயரை சிஸ்டர் ஆன்ட்ரே என மாற்றிக்கொண்டார். தற்போது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நர்சிங் ஹோமில் வசித்துவரும் இவர் தினந்தோறும் கடவுள் வழிப்பாட்டை மறப்பதில்லை.

பிறந்தநாள்

இரு கண்களிலும் பார்வையை இழந்த சிஸ்டர் ஆன்ட்ரே சமீபத்தில் தனது 118 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சாக்லேட்டுகளால் செய்யப்பட்ட காக்டெய்ல் என்றால் கொள்ளை பிரியமாம். இவருடைய 118 வது பிறந்த நாளுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கடிதங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக வயதுடைய நபர்

வரலாற்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜென்னி லூயிஸ் கால்மென்ட் என்பவர்தான் உலகின் அதிக வயதுடைய நபராக கருதப்பட்டார். 1997ஆம் ஆண்டு அவர் காலமானபோது அவருடைய வயது 122 வருடங்கள் மற்றும் 164 நாட்கள் ஆகும். அதன் பிறகு பூமியில் வாழ்ந்த மிக அதிக வயதுடைய நபர் தற்போது மரணமடைந்துள்ள ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா தான்.

இந்த நிலையில் தான் உலகின் அதிக வயதுடைய நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சிஸ்டர் ஆன்ட்ரே. இவர், ஜென்னி லூயிஸ்-ன் சாதனையை முறியடித்து அதிககாலம் வாழ்வார் என நம்புவதாக ஆன்ட்ரே வசித்துவரும் நர்சிங் ஹோம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

OLD WOMAN, WORLD OLDEST PERSON, 118 YEAR OLD, கின்னஸ் அமைப்பு, அதிக வயதுடைய பெண்மணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்