உலகத்துலயே வயசான டாக்டர்.. இப்பவும் நோயாளிகளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறாரு.. பிரம்மித்துப்போன கின்னஸ் அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் வயதான டாக்டர் என்று கின்னஸ் அமைப்பு சான்றளித்து கவரவப்படுத்திய மருத்துவரான ஹோவர்ட் டக்கர் இன்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | சொந்த காசுல Foriegn போன பாட்டி.. 65 வருஷ கனவை நிறைவேற்றிய நிஜ சிங்கப்பெண்.. நெகிழ்ச்சி தருணம்

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தை சேர்ந்தவர் டாக்டர் ஹோவர்ட் டக்கர். இவர் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பிறந்தார். மருத்துவம் படித்த இவர் இரண்டாம் உலகப்போரில் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். கோரிய போரின்போது, அட்லாண்டிக் கடற்படையில் இவர் ராணுவ வீரர்களுக்கு மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு உலகின் வயதான மருத்துவராக கின்னஸ் அமைப்பு இவரை தேர்வு செய்தது.

ஒருநாள், உலகின் வயதான முடிதிருத்துபவர் என ஒருவரை பற்றிய செய்தியை டக்கர் படித்திருக்கிறார். அப்போது தான் கின்னஸ் அமைப்புக்கு தன்னை பற்றி கடிதம் எழுதியுள்ளார் அவர். அதன்பிறகு டக்கரை பற்றி தகவல்களை சரிபார்த்த கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள், அவருக்கு உலகின் மிக வயதான மருத்துவர் என்று 2021 ஆம் ஆண்டு சான்று அளித்தனர். அப்போது அவருடைய வயது 98 வருடங்கள் 231 நாட்கள் ஆகும். தற்போது 100 வயதை கடந்திருக்கும் டக்கர், இன்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

டக்கர், தினமும் 9 - 6 மணி வரையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். அவரது 100வது பிறந்தநாளுக்கு பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இதற்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், தற்போது ஆன்லைன் மூலமாக தற்போது தனது நோயாளிகளுடன் கலந்துரையாடி வருகிறார். இருப்பினும், பணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தான் எப்போதுமே சிந்தித்ததில்லை எனக் கூறுகிறார் இந்த 100 வயது தாத்தா.

ஓய்வுபற்றி அவர் பேசுகையில்," என்னை பொறுத்தவரையில் பணி ஓய்வு பெறுவது அதிக நாள்கள் வாழ்வதற்கு எதிரி போன்றது. என்னுடைய இளம் வயதில்கூட ஓய்வு பற்றி நான் ஒரு போதும் நினைத்ததில்லை. நீங்கள் செய்வதை விரும்பி, அதைச் செய்யும் திறன் கொண்டவராக இருக்கும்போது, நீங்கள் ஏன் ஓய்வு பெற விரும்புகிறீர்கள்? இந்த கின்னஸ் உலக சாதனை பட்டத்தை நான் ஒரு தனி மரியாதையாக கருதுகிறேன். மேலும் இது ஒரு நீண்ட, திருப்தி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மற்றொரு சாதனையாக கருதுகிறேன்" என்றார்.

இவருடைய மனைவி சூ (வயது 89). உளவியல் மருத்துவரான இவர் இப்போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த வயதான டாக்டர் தம்பதியை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துவருகின்றனர்.

Also Read | "வா எனக்கு பவுலிங் போடு பார்க்கலாம்".. பயிற்சியில் இருந்த 11 வயசு சிறுவனை அழைத்த ரோஹித் ஷர்மா.. மாஸ் வீடியோ..!

DOCTOR, WORLD OLDEST DOCTOR, WORLD OLDEST DOCTOR HOWARD TUCKER, டாக்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்