உலகத்தின் தனிமையான போஸ்ட் ஆபிசில் வேலை.. இதுமட்டும் செஞ்சா போதுமாம்..கேட்டாவே திகிலா இருக்கே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகத்தின் தனிமையான போஸ்ட் ஆபிசில் மேனேஜர் வேலை காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

அண்டார்டிகா

உலகின் தென்கோடியில் அமைந்துள்ள குளிர் நிரம்பிய கண்டம் தான் அண்டார்டிக்கா. இங்கே நிரந்தர குடியிருப்பு என்று எதுவும் இல்லை. பல்வேறு நாடுகளும் இந்த குளிர் பாலைவனத்தில் ஆய்வுக்கூடங்களை அமைத்துள்ளன. உலகின் மிகவும் குளிரான பகுதியில் அமைந்துள்ள இந்த கண்டத்தில் போலார் கரடிகள் மற்றும் பென்குவின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதுபோல அண்டார்டிக்காவை சுற்றி பல்வேறு தீவு கூட்டங்கள் உள்ளன. அங்குள்ள போஸ்ட் ஆபிசில் தான் மேனேஜர் வேலை காலியாக இருக்கிறதாம்.

பொதுவாக, நம் அனைவருக்கும் புதுமையான இடத்தில் வித்தியாசமான சூழலில் பணிபுரியவேண்டும் என ஆசை இருக்கும். அதனை பூர்த்தி செய்யவே இந்த பெங்குவின் போஸ்ட் ஆபீஸ் நிறுவப்பட்டுள்ளது.

பெங்குவின் போஸ்ட் ஆபீஸ்

1944 ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்தது ஐக்கிய ராஜ்யம். அதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கே ஒரு போஸ்ட் ஆபிஸையும்  திறந்திருக்கிறது அந்த நாடு. இதனை ஐக்கிய ராஜ்ய - அண்டார்டிகா புராதான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. அண்டார்டிகாவின் அருகே அமைந்துள்ள கூடியர் தீவில் இருக்கும் இந்த போஸ்ட் ஆபீசில் மியூசியம் ஒன்றும் சிறிய பரிசுப் பொருள் விற்பனையகமும் இருக்கிறது.

அண்டார்டிகாவிற்கு சுற்றுலா வரும் பெரும்பாலானோர் இந்த போஸ்ட் ஆபீஸிற்கு  வழக்கம். அப்படி ஒவ்வொரு சீசனிலும் 18,000 பேர் வரை இந்த இடத்திற்கு வருகிறார்களாம். இந்த ஆபிசின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அண்டார்டிகாவின் தொன்மையான இடங்களை பராமரித்துவருகிறது இந்த அறக்கட்டளை.

என்ன வேலை?

இங்குள்ள கடையை நிர்வகிக்கவும், போஸ்ட் ஆபீஸ் உதவியாளராகவும் 5 மாதங்கள் பணிபுரிய ஆள் தேவைப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. முக்கியமாக இந்த தீவில் உள்ள பென்குவின்களை அவ்வப்போது எண்ணி கணக்கு காட்டவேண்டுமாம். ஆனால் இது மிகவும் சவாலான பணி என அறக்கட்டளையே தெரிவித்திருக்கிறது.

உறை குளிர் ஒருபக்கம் என்றால் இங்கே ஒரு பெட்ரூம் கொண்ட சிறிய படுக்கையறை மட்டுமே உள்ளது. கழிப்பிட வசதி இந்த கட்டிடத்திற்கு வெளியே அமைந்திருக்கிறது. அதையும் தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். அதுமட்டும் அல்லாமல் இங்கே குளியலறையை கிடையாதாம். சுற்றுலா கப்பல்கள் வந்தால், அதில் தான் குளித்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் 2 வாரங்கள் அளவிற்கு குளிக்காமல் இருக்கவும் நேரிடலாம்.

கண்டிஷன்

இவையெல்லாம் தாண்டி இங்கு இன்டர்நெட் வசதிகள் கிடையாது. சாட்டிலைட் போன்கள் தான். அதுவும் எப்போதாவது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு உடல்நிலை பாதித்தால் மருத்துவனைக்கு செல்ல நீங்கள் 7 நாட்கள் பயணம் செய்யவேண்டும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ANTARCTICA, POSTOFFICE, HIRING, அண்டார்டிகா, போஸ்ட்ஆபீஸ், வேலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்