உலகின் விலை உயர்ந்த Trash Bag.. "ஒரு பேக் மட்டும் இவ்ளோ லட்சம் ரூபாயா??.." அப்படி என்னய்யா அதுல இருக்கு??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக நமது வீட்டில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில், குப்பைத் தொட்டியுடன் சேர்ந்து, குப்பை பை ஒன்று இருப்பதையும் காணலாம்.

Advertising
>
Advertising

Also Read | "ஆத்தி, 61 வயசு வரை இது தெரியாம போச்சே.." பிறப்பு சான்றிதழில் முதியவர் பார்த்த விஷயம்.. "மனுஷன் ஒரு நிமிஷம் அப்படியே வாயடைச்சு போய்ட்டாரு.."

குப்பைத் தொட்டியுடன் சேர்த்து இந்த குப்பை பைகளை வைப்பதற்கான காரணம், தொட்டி நிறையும் போது, நிரம்பிய பைகளை மட்டுமே எடுத்து மாற்றி விட்டு, புதிய பை ஒன்றை வைப்பதற்காக தான்.

இதன் மூலம், குப்பை தொட்டியிலும் அழுக்கு அண்டாமல், சுற்றுசூழலை சிறப்பாக வைத்திருக்கவும் உதவி செய்யும். இதனால், குப்பை பைகளை பயன்படுத்தி, அதனை குப்பை வண்டியில் வீசவும் செய்யலாம்.

இந்த குப்பை கவரின் விலை என்பது, அளவை பொறுத்து சுமார் 100 ரூபாய் வரை அதிகபட்சமாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் இந்த குப்பை கவரின் விலை, சுமார் ஒரு லட்சத்துக்கு ரூபாய்க்கு மேல் உள்ளது என அறிந்தால் உங்களுக்கு எப்படி தோன்றும். அப்படி ஒரு விலை மதிப்புள்ள குப்பை பையை தான் பிரபல நிறுவனம் ஒன்று தற்போது வடிவமைத்துள்ளதாக இணையத்தின் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Balenciagas எனப்படும் உலகின் பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று, 1790 டாலர்களுக்கு குப்பை பை ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை, சுமார் 1.4 லட்சம் ரூபாய் ஆகும். உலகின் விலை உயர்ந்த குப்பை போடும் பையாகவும் இது பதிவாகி உள்ளது. நம் வீட்டில் உள்ள வீணான பொருட்களை சேமித்து, அதை கொண்டு கொட்டுவதற்கு எதற்கு இத்தனை டாலர்கள் செலவு செய்து குப்பை போய் வாங்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றலாம்.

ஆனால் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள குப்பை பையானது, கன்றின் தோல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மிக மிக பளபளப்பான கோட்டிங்கும் இதன் மீது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல, இன்னும் நிறைய விலை மதிப்புமிக்க பொருட்களை கொண்டு இந்த பையை உருவாக்கி உள்ளனர்.

மேலும் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் இந்த குப்பை பை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக பலவிதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | பரபரவென இயங்கிய விமான நிலையம்.. "அங்க இருந்த குப்பை தொட்டி'ல கைவிட்டு பாத்தப்போ.." மிரண்டு போன அதிகாரிகள்

TRASH BAG, EXPENSIVE TRASH BAG

மற்ற செய்திகள்