இதுக்கு இல்லையா சார் End.?.. உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்.. போட்டாக்களை பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள்.. எங்கப்பா இருக்கு.?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கி புதிய சாதனையை படைத்திருக்கிறது ஸ்விட்சர்லாந்து. இந்நிலையில், இந்த ரயிலின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
ரயில் பயணங்கள் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவற்றை ரசித்தபடியே பயணிப்பது அலாதியான அனுபவம் தான். அதுவும் ஸ்விட்சர்லாந்து போன்ற பச்சை பசேல் என்று எழுந்து நிற்கும் மலைகளும், காடுகளும் நிறைந்த நாட்டில் ரயில் பயணம் என்றால் மக்களிடையே உருவாகும் போட்டி குறித்து சொல்லவே வேண்டாம்.
இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரெசின் ரயில்வே நிறுவனம் உலகின் மிகப்பெரிய பயணிகள் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. தற்போது அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறது.
ஸ்விட்சர்லாந்தில் ரயில்வே சேவைகள் துவங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த நீளமான ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பயணிகள் ரயில் கடந்த சனிக்கிழமை இயக்கப்பட்டது. ஆல்ப்ஸ் மலையோரம் அமைந்துள்ள பிரெடா முதல் பெர்குவென் வரை உள்ள அல்புலா/பெர்னினா பாதையில் 100 பெட்டிகளை கொண்ட இந்த பயணிகள் ரயில் இயக்கப்பட்டு, புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.
இயற்கை அழகு ததும்பி நிற்கும் இந்த 25 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதை 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது. இதன் வழியே ரயில் செல்லவேண்டும் என்றால் 48 சுரங்க பாதைகள், 22 பாலங்களை கடக்க வேண்டும். இதில் வளைந்த சுண்ணாம்பு பாலங்களும் அடக்கம். இந்த பாதையை கடக்க இந்த உலகை மிக நீளமான பயணிகள் ரயிலுக்கு ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக நேரம் தேவைப்படுகிறது.
இந்த சாதனையை பார்க்க ஏராளமான பயண ஆர்வலர்களும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய ரேஸியன் ரயில்வே இயக்குநர் ரெனாடோ ஃபாசியாட்டி," ஸ்விஸ் ரயில்வேயின் 175 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் நாங்கள் உள்ளோம். அதன் ஒரு பகுதியாக இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்றார். இந்நிலையில், இந்த ரயிலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tea போடுறதுல கின்னஸ் ரெக்கார்டா..? அதிர்ந்து போன அதிகாரிகள்.. அப்படி என்னப்பா செஞ்சாங்க.?
- "இத மட்டும் பண்ணா உங்களுக்கு Fine தான்.." Switzerland இந்தியன் உணவகம் கொடுக்கும் அதிரடி 'Warning'.. "இது கூட நல்ல ஐடியா'வா இருக்கே.."
- 3 ஸ்டார்.. 5 ஸ்டார் இல்ல.. இது ஜீரோ ஸ்டார் ஹோட்டல்.. 4 பக்கமும் சுவரே இல்லங்க.. வைரல் பின்னணி.!
- "தம்பி மேல பாசத்த காட்ட இவ்ளோ பெரிய லெட்டரா??.." 12 மணி நேரம் எழுதிய அக்கா.. அதோட நீளத்த கேட்டா தலையே சுத்துது'ங்க..
- ஒத்த விரல் தான்.. சும்மா 8 விநாடிக்கு.. 129.5 கிலோவ தூக்கிப் பிடிச்ச மனுஷன்.. யாருய்யா இவரு.?
- "உயரத்தை பார்த்து பயப்படுவதை போக்க நெனெச்சேன்"..ஒருநாள்ல அதிகமுறை Bungee Jumping செய்த நபர்..எண்ணிக்கையை கேட்டு கிறுகிறுத்துப்போன நெட்டிசன்கள்..!
- ஒரே கம்பெனில அதிக வருஷம் வேலை பார்த்ததற்காக கின்னஸ் ரெக்கார்டு.. அசத்தும் 100 வயது தாத்தா..! எத்தனை வருஷம் தெரியுமா ?
- ஜெயில் கைதியாக வாழ ஆட்கள் தேவை.. கம்பி எண்ண யாரெல்லாம் ரெடி? அப்ளை பண்ணுங்க.. சிறைச்சாலை வெளியிட்ட தகவல்
- ஜஸ்ட் மிஸ்: யுவராஜ் சிங் சாதனையை காலி பன்னிருப்பாரு.. அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
- அந்த கார்ல லிஃப்ட் கேட்டு பாப்போம்.. ஐயோ மேடம் நீங்களா? எவ்ளோ பெரிய ஆளு நீங்க.. காரில் ஏறியவுடன் துள்ளி குதித்த பெண்கள்