உலகின் மிகப்பெரிய மது பாட்டில்.. ஏலத்துல போட்டிபோட்ட கோடீஸ்வரர்கள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய மது பாட்டில் ஸ்காட்லாந்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "என்னய ஏமாத்திட்டு போகலாம்னு பாக்குறியா.?".. வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற காதலன்.. கண்ணை மறைச்ச கோபம்.. பதறிப்போன போலீஸ்..!

மிகப்பெரிய பாட்டில்

ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த மது பாட்டிலுக்கு தி இன்ட்ரேபிட் (The Intrepid) எனப் பெயர்சூட்டியுள்ளது அந்த நிறுவனம். வழக்கமான பாட்டில்களை போல 444 மடங்கு பெரிய இந்த பிரம்மாண்ட பாட்டிலின் உயரம் 5 அடி 11 அங்குலமாகும். இதனுள் 32 ஆண்டு பழமையான 68.41 கேலன் மது நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த பாட்டிலை சமீபத்தில் ஏலத்திற்கு கொண்டுவந்திருக்கிறது லியோன் மற்றும் டர்ன்புல் என்னும் ஏல நிறுவனம்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஃபஹ் மாய் மற்றும் ரோஸ்வின் ஹோல்டிங்ஸின் டேனியல் மாங்க் அவரது தந்தை ஸ்டான்லி மாங்கின் நினைவாக இதன் திட்டத்தில் இறங்கினார். தனது வாழ்வில் பல முக்கிய பொருட்களை கண்டறிந்த ஸ்டான்லியின் நினைவாக இந்த பாட்டில் உருவாக்கப்பட்டது. இதில் 11 ஆளுமைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனவு

இதுபற்றி பேசிய டேனியல்," எனது தந்தையின் நினைவாக இந்த பாட்டிலை உருவாக்கினோம். அதில் பல்வேறு விதத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 11 முன்னோடிகளின் புகைப்படங்களை இடம்பெற செய்திருக்கிறோம். இதனுடன், உருவாக்கப்பட்ட வழக்கமான அளவுள்ள பாட்டிலும் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எனது தந்தையின் 80 வது பிறந்தநாளில் இந்த பாட்டில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது" என்றார்.

கின்னஸ் சாதனை

இந்த பாட்டில் கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட போதே, உலகின் மிகப்பெரிய மதுபாட்டில் என கின்னஸ் நிர்வாகம் சான்று அளித்திருந்தது. ஏலத்தில் 1.5 மில்லியன் யூரோ வரையில் இந்த பாட்டில் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒருவர் 1.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 10.65 கோடி ரூபாய்) கொடுத்து இந்த பாட்டிலை வாங்கியுள்ளார். ஆனால், தனது பெயர் மற்றும் முகவரியை அந்நபர் வெளியிட மறுத்துவிட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உலகின் மிகப்பெரிய மதுபாட்டில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | அப்படிப்போடு .. இனி பேருந்துகளில் Gpay மூலம் இ-டிக்கெட்.. தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..முழுவிபரம்.!

WHISKY BOTTLE, WORLD LARGEST WHISKY BOTTLE, மது பாட்டில், மிகப்பெரிய மது பாட்டில்

மற்ற செய்திகள்