"உலகின் Dirty மனிதர்".. என்று அழைக்கப்பட்ட மனிதர்.. 50 வருடமா குளிக்கவே இல்ல.. முதல் முறையா குளித்த அடுத்த சில மாதங்களில் நடந்த சோகம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒவ்வொரு நாளிலும் அனைவருக்கும் அடிப்படையான சில கடமைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக குளிப்பதும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல விஷயங்களை சீராக வைத்துக் கொள்ளவும் குளிப்பது என்றும் அவசியமான ஒன்றாகும்..

அதே வேளையில், குளிக்காமல் சில நாட்கள் இருந்தால் கூட உடலில் ஏதாவது நோய்கள் உருவாகும் என்றும் பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல் இருந்து வந்த நபர் குறித்த துயர செய்தி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் பார்சில் என்னும் பகுதி அருகே தேஜ்கா என்ற சிறிய கிராமம் ஒன்று அமைந்துள்ளது. அங்கே வசித்து வந்தவர் அமாவு ஹாஜி. யாருடனும் சேராமல் தனியாக ஹாஜி வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார் அமாவு ஹாஜி.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் குளிக்காமல் இருந்ததால் "உலகின் அழுக்கு மனிதர்" அழைக்கப்பட்ட மனிதராக வலம் வந்தார். இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு, அமாவு ஹாஜி குறித்த ஆவண படம் ஒன்று வெளியாகி இருந்தது. இத்தனை ஆண்டுகள் அமாவு ஹாஜி குளிக்காமல் இருந்து வருவதற்கான காரணம், அப்படி அவர் குளித்தால் உடல்நிலை சரியில்லாமல் நோய் வாய்ப்பட்டு விடுவார் என்ற் பயத்தில் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு மத்தியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமாவு ஹாஜியை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சேர்ந்து குளிப்பாட்டி இருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 94 வயதில் அமாவு ஹாஜி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளது.


உலகின் அழுக்கு மனிதர் என அழைக்கப்பட்ட மனிதர், தற்போது உயிரிழ்ந்துள்ள தகவல் இணையத்தில் அதிகம் வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக பலரும் அவருக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

DIRTIEST MAN, IRAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்