அடேங்கப்பா.. உலகின் மிகப்பெரிய பூனையா..?.. பாசமா இருக்கும்.. ஆனா "இப்படி ஒரு" பிரச்சனை இருக்காம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பூனை என நம்பப்படும் பூனையின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | திடீர்ன்னு வானத்துல தோன்றிய வண்ண வெளிச்சம்.. ஆய்வாளர்கள் காரணத்தை சொன்னதும் இன்னும் ஷாக் ஆகிட்டாங்க..!

பூனை

பூனைகள் வளர்ப்பது பலருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. இன்று மட்டுமல்ல, பழங்காலத்திலேயே மக்கள் பூனைகளை வளர்த்திருப்பதற்கான சான்றுகள் நிறையவே இருக்கின்றன. சொல்லப்போனால், பூனைகளை கடவுளாக வழிபட்ட மக்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி, மனித வாழ்க்கையோடு பிணைந்த பூனைகள் பற்றிய பல வரலாறு தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் தன்மை கொண்டவை. நாய்களை போலவே, பூனைகளிலும் பல இனங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் மைனே கூன்ஸ் (Maine Coons).

பழமையான பூனை இனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த இன பூனைகள் மிகப்பெரிய உடல் அமைப்பை பெற்றிருக்கின்றன. இவற்றின் பூர்வீகம் வட அமெரிக்கா ஆகும். இவை பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் பெரியதாக இருந்தாலும் இவை மக்களுடன் மிகவும் பாசத்துடன் பழக்கூடியவை என்கிறார்கள் நிபுணர்கள்.

உயரம்

ரஷ்யாவை சேர்ந்த யூலியா மினினா என்னும் பெண் தன்னுடைய வீட்டில் மைனே கூன்ஸ் இன பூனையை வளர்த்து வருகிறார். அதற்கு கெஃபிர் எனப் பெயர்சூட்டியுள்ளார் மினினா. இவற்றின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதனாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

தன்னுடைய பூனை குறித்து பேசும் அவர்,"எங்களுடைய வீட்டில் ஒருவர் போல கெஃபிர் வசிக்கிறது. பலரும் முதன்முறை கெஃபிரை பார்க்கும்போது அதனை நாய் என நினைத்துவிடுகின்றனர். என்னுடைய இரண்டு வயது மகள் அனெச்காவும் எங்களுடைய கெஃபிரும் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த விளையாட்டுகள் சலிப்பதே இல்லை. எப்போதும் கெஃபிருக்கான உணவை எனது மகளே கொடுத்து வருகிறாள். சொல்லப்போனால் இருவரும் சிறந்த நண்பர்கள்" என்கிறார்.

மினினாவின் செல்ல பூனை சராசரியாக 2 வயது சிறுவனின் உயரம் கொண்டது. பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் இது மிகவும் பாசமான பூனை என்கிறார் மினினா. இதனிடையே அவருடைய செல்ல பூனையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | "இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!

CAT, WORLD BIGGEST CAT, பூனை, மிகப்பெரிய பூனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்