'வேற வழி இல்ல, 'Work From Home' தான் பாக்கணும்'... 'ஆனா 55 மணி நேரம் வேலை'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நீண்ட நேரம் பணி செய்வது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போது கொரோனா காலம் என்பதால் கடந்த வருடம் முதலே அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் வீட்டிலிருந்து பணி செய்வதால் ஊழியர்களின் பணிச் சுமை மற்றும் வேலை செய்யும் நேரம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில் “வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்வது உடல் ஆரோக்கியத்திற்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என உலக சுகாதார அமைப்பின் காலநிலை மாற்றம் மற்றும் மருத்துவ இயக்குநர் மரியா நெய்ரா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தெற்காசிய நாடுகள், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கிறார்கள்.

194 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேலாகப் பணி புரிபவர்கள் 35% பக்கவாதத்தால் பாதிக்கப்படவும்,17% இதயப் பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே நாம் பணியாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை அளிக்க வேண்டிய சூழலில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை நேரங்களை அதிகரிக்காமல் இருப்பதே சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி பிரான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்