‘4 மடங்காக அதிகரித்த இறப்பு’... ‘விமான நிலையத்தை மார்ச்சுவரி ஆக்குறோம்’... ‘இங்கிலாந்தை துரத்தும் துயரம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், மற்ற நாடுகளில் பெரும் துயரத்தை அளித்து வருகிறது. இத்தாலி. ஸ்பெயின், அமெரிக்காவை தொடர்ந்து, இங்கிலாந்தையும் உலுக்கி வருகிறது. அங்கு பிரிட்டன் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட யாரையும் விட்டுவைக்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளதால், அங்குள்ள பிர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் (Mortuary) பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், முதல்கட்டமாக 1,500 உடல்களை வைக்கும் அளவிற்கான பிணவறையாக மாற்றப்பட உள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு மட்டுமில்லாமல், வேறு எந்த நோயால் பாதிக்கப்பட்டவரும் தற்போது அங்கு வைப்பதற்காக தற்காலிகமாக பிணவறை உருவாக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பினால் அங்கு 578 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை 475 ஆக இருந்த இந்த எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது. சுகாதாரத்துறை கொண்டு வந்த இறப்பு அறிவிப்பு மாற்றத்தால், இந்த எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. "அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...
- ‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதிய தகவல்!
- 'போலீசார்' கையில் 'லத்தி' எடுக்க 'தடை...!' 'பொதுமக்களை அடிக்கவோ, மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது...' 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' ...
- '135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...
- ‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி!'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
- WATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’!
- 'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை!
- 'வீட்டுல இருக்கோம்னு மொபைல் டேட்டாவை காலி பண்ணாதீங்க'... இது நடக்க வாய்ப்பிருக்கு!
- 100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்!