‘கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிச்சாலும்...’ .. அதிர்ச்சியை கிளப்பிவிட்ட அதிபர்! ‘மீண்டும்’ சர்ச்சைக்குள்ளான பேச்சு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் என்றும்,  ஊரடங்கு, முகக்கவசம் எதுவும் அதற்கு தேவையில்லை என்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி போல்சோனாரோவுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று உண்டானது. இதனால் தன்னை தனிமைப் படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்தார்.

பரிசோதனையில் அவருக்கு, கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.  தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நடந்த கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது. உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க முனைந்து கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரும் அந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ளப் போவதில்லை என அதிபர் போல்சோனாரோ கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சமூக ஊடக நேரலை நிகழ்ச்சியில் போல்சோனாரோ, தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளப்போவதில்லை. அது தன் உரிமை என்று இது தொடர்பாக தெரிவித்துள்ளார். பிரேசில் நாடு உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில்  3-வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 62 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதுடன்,  1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்