தேவாலயங்களில் ‘ஊதா’ துணியால் மூடப்பட்டுள்ள ‘பெண் சிலைகள்’.. காரணம் என்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தேவாலயத்தில் உள்ள பெண் சிலைகள் அனைத்தும் ஊதா நிற வண்ணத்துணிகளால் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிக்கோ நாட்டில் உள்ள தேவாலயங்களில் உள்ள பெண் சிலைகள் ஊதா நிற துணிகளால் மூடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டிக்கும் வகையில் வரும் 9ம் தேதி அந்நாட்டில் பெண்கள் மற்றும் பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்தான் தேவாலயங்களில் உள்ள பெண் சிலைகள் ஊதா நிற துணிகளால் மூடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் தேவாலயங்களில் உள்ள பெண்சிலைகள் ஊதா துணிகளால் மூடப்படுவது இயல்பான நடைமுறைதான் என்றும், அதில் வேறு எந்த காரணமும் கிடையாது என மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

MEXICO, CHURCH, PURPLE, CLOTHES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்