‘பொண்ணுங்கலாம் சேர்ந்து பசங்கள கடத்தி கூட்டு பலாத்காரம் பண்ணனும்’.. 'திரைக்கதை எழுத்தாளர்' சர்ச்சை பேட்டி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாலின பேதம், ஆண்-பெண் சமத்துவ உரிமை பற்றிய பாகிஸ்தான் திரைக்கதை எழுத்தாளரின் பேச்சு வைரலாகி, இருவேறு விதமான கருத்துக்களையும் உருவாக்கி வருகிறது.

பெண்களும் ஆண்களைப் போன்று சம உரிமை படைத்தவர்கள் என்றாலும் பாலின பேதங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியானால் எப்போது பாலின பேதங்கள் அற்ற சூழல் உருவானதாக ஒப்புக்கொள்ள முடியும் என்றால், ஆண்களைப் போல் பெண்களும் கூட்டமாக சேர்ந்து ஆணை கூட்டு பலாத்காரம் செய்தாலொழிய  ஆண்-பெண் இன பேதமற்ற சமத்துவ உரிமை கிடைத்துவிட்டது என்று குறிப்பிடமுடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆண்களை விட நவீனத்தன்மையுடனும், உயர்ந்தும் பெண் காணப்பட்டால் அவளை ‘நீயெல்லாம் பொண்ணா?’ என்றுதான் ஆணாதிக்க சமூகம் குறிப்பிடுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். ஆனால் ஆணின் மரியாதையையும் தரத்தையும் அவரது இணையாக இருக்கும் பெண்ணின் கைகளில் இருக்கும்போது, ஆணைச் சுற்றியே பெண்ணின் வாழ்க்கை இருக்க வேண்டுமா என்று கேட்ட அவர் நாம் 18-ஆம் நூற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

WRITER, PAKISTAN, GENDEREQUITY, FEMINIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்