பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குங்க.. ஆதரித்த பெண் எம்பிக்கள்.. நாடு பெயர் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது குறித்து நாடாளுமன்றம் ஒன்றில் எழுந்த விவாதத்தில் பெண் எம்.பி-க்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Advertising
>
Advertising

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவாதம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எழுந்துள்ளது. இதற்கு அந்நாட்டைச் சேர்ந்த பெண் எம்.பி-க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பல எதிர்ப்புகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக உள்ளது. ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி டயானா கமகே உட்பட சிலர் பாலியல் தொழிலை இலங்கையில் சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இரவு நேரங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் எம்.பி டயானா கமகே. இலங்கையில் இரவு நேரங்களில் பொருளாதரத்தைப் பெருக்குவதற்கான விஷயங்களாக ஹோட்டல்கள், உணவகங்க, மதுபான கடைகள், பாலியல் தொழில் ஆகியன உள்ளன.

இதுவரையில் இலங்கையில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது தான். மேலும் பெண் எம்.பி ஆன கோகிலா குணவர்த்தன, “பாலியல் தொழில் என்பது புத்தர் காலத்தில் இருந்தே பழக்கத்தில் உள்ளது. இதுதான் உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த தொழில். இது என்னுடைய கருத்து தான் என்றாலும் நான் எனது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலேயே கூறுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

எம்.பி-யின் இந்த கருத்துக்கு இலங்கையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனாலும், வேறு சில பெண் எம்.பி-க்கள், “பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பல தரப்பினரும் மோசடி செய்து வருகின்றனர்.வாகன ஓட்டிகள், இடைத்தரகர்கள் எனப் பலரும் அவர்களை ஏமாற்றுகின்றனர். ஏற்கெனவே இந்தத் தொழிலில் மனதளவிலும் உடலளவிலும் பல கஷ்டங்களுடன் அந்தப் பெண் சம்பாதிப்பதை ஏமாற்ற பலர் இருக்கின்றனர்.

பாலியல் தொழிலை சட்டப்பூர்வம் ஆக்குவதனால் எந்த அப்பாவி பெண்களும் மோசடிகளால் பாதிக்கப்படமாட்டார்கள். தேவையில்லாமல் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் வாழ்க்கையையும் அவர்களால் வாழ முடியும்” எனக் கூறுகின்றனர். இது அந்தந்த உறுப்பினர்களின் தனிக்கருத்து என்றும் அரசின் கருத்து இல்லை என்றும் எம்.பி-க்கள் கூறியுள்ளனர்.

SRILANKA, SEX WORK, SEX WORKERS, SRILANKA PARLIAMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்