வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த தாய் ஒருவரை ஏமாற்றி 16 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
பணம் வேண்டும்
இங்கிலாந்தின் பைக்டன் பகுதியை சேர்ந்தவர் பவுலா பௌட்டன். இவருடைய மகள் சாம். இவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பவுலாவிற்கு ஒரு வாட்சாப் மெசேஜ் வந்திருக்கிறது. அதில் தனக்கு 16,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம்) பணம் வேண்டும் என சாம் கேட்டதாக கூறுகிறார் பவுலா. இதனையடுத்து அந்த மெசேஜை நம்பி பவுலாவும் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், நடந்தது என்ன என்பது அதற்குப் பிறகே அவருக்கு விளங்கியுள்ளது.
மெசேஜ்
இதுபற்றி பவுலா பேசுகையில்,"புதிய எண் ஒன்றிலிருந்து மெசேஜ் வந்தது. அதில், 'நான் சாம். இது என்னுடைய புதிய நம்பர். பழைய எண்ணை அழித்துவிடவும்' எனக் குறிப்பிட்டிருந்தது" என்றார். இதனால் அது தன்னுடைய மகள் தான் என்று நம்பிய பவுலா, தொடர்ந்து வாட்சாப் மூலமாக உரையாடி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தனக்கு 16,000 பவுண்டுகள் பணம் வேண்டும் என அதே எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது.
இதனை நம்பி பவுலா பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால், வழக்கமாக குட்நைட் மெசேஜ் அனுப்பினால் ரிப்ளை செய்யும் சாம், அவ்வாறு செய்யாமல் இருந்ததால் பவுலாவிற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
வெளிச்சத்துக்கு வந்த உண்மை
இதனிடையே மகளை சந்தித்து இதுபற்றி பேசும்போதுதான் பவுலாவிற்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில்," அவர்கள் மிகவும் கண்ணியமான முறையில் மெசேஜ் செய்தார்கள். வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்வதை போன்றே என்னிடம் உரையாடினார்கள். நான் குட்நைட் சொல்லியும் சாம் பதிலளிக்காதது எனக்கு சந்தேகத்தை அளித்தது" என்கிறார்.
இதுபற்றி சாம் பேசுகையில்," உலகத்தில் இதுபோன்ற மோசடி நபர்கள் இருப்பதை அறிந்தும் எனது தாய் இவ்வளவு பணத்தை எப்படி உடனடியாக அனுப்பினார் என்பது வியப்பாக இருக்கிறது. எனக்கு கலவையான உணர்வுகள் இருக்கின்றன. ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் ஒருபக்கம் எனது அம்மாவை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது. இவ்வளவு தொகையை அவள் அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை நேரில் கண்டபிறகு தான் அறிந்துகொண்டேன்"என்றார்.
மகளை போல மெசேஜ் அனுப்பி மூதாட்டியிடம் இருந்து 16,000 பவுண்டுகள் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிய இந்த சம்பவம் குறித்து பைக்டன் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவுல இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. கடைசில நடந்த டிவிஸ்ட்..!
- உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை உடைக்க பாய்ந்த பாட்டி.. பாதியிலேயே பறந்த விக்.. கோவத்துல செஞ்ச காரியத்தால் அதிர்ந்துப்போன அதிகாரிகள்..வைரல் வீடியோ.!
- ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
- "எங்க குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்".. கோவை பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!
- கல்யாணமான ஒரு வாரத்திலேயே பிரிந்து சென்ற மனைவி.. மறுபடியும் சேர்த்து வைக்காத மாமியார்.. ஆத்திரத்தில் மருமகன் செஞ்ச காரியம்..!
- “உங்க வீட்டுல புதையல் இருக்கு”.. வசமாக சிக்கிய 3 போலி மந்திரவாதிகள்.. செல்போனை பார்த்து மிரண்டு போன போலீசார்..!
- எதுக்கு என் நம்பரை Block செஞ்ச?.. நண்பனின் வீட்டுக்கு வந்து கேள்விகேட்ட இளம்பெண் செஞ்ச பகீர் காரியம்..!
- உயிரிழந்த தந்தை.. மனசுல வேதனை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. கல்விக் கனவுக்காக நெகிழ வைத்த மாணவி
- சாலை ஓரத்தில் பூ விற்றவர் மகள்.. இப்போ கலிஃபோர்னியா University-ல.. நெகிழ்ச்சி சாதனை
- பொண்ணோட செல்போனுக்கு வந்த லிங்க்.. கூடவே ஒரு மெசேஜ்.. கிளிக் பண்ணதும் காத்திருந்த ஷாக்.. பரபரப்பு சம்பவம்..!