"எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு".. 2 வருஷம் டேட்டிங்கில் இருந்த இளம் பெண்கள்.. சமீபத்தில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்துவந்த நிலையில், இருவரும் சகோதரிகளாக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது.
உலகம் முழுவதும் காதல் பற்றிய புரிதல்கள் நிறையவே மாறிவிட்டன. ஒருபால் காதல்களை, திருமணத்தை பல நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இந்நிலையில் கனடாவை சேர்ந்த இரு இளம் பெண்களுக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் கார்லி கோன்சியர் மற்றும் மெர்சிடிஸ் ஸ்டீவர்ட். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தெரியவந்த தகவலால் இருவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டு பயணம்
கார்லி கோன்சியர் மற்றும் மெர்சிடிஸ் ஸ்டீவர்ட் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருக்கின்றனர். இருவரும் நட்பாக பழக துவங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்குள்ளும் காதல் அரும்பியிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் டேட்டிங்கில் இருந்து வருகிறார்கள். இவர்கள் இணைந்து அவ்வப்போது பிரபல சமூக வலைதளமான டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் பதிவிட்ட வீடியோவில், இவருடைய அம்மாவும் ஒரே ஆணை காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து கமெண்டில் ஏராளமான மக்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக,"நீங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என எனக்கு தோன்றியது. அதற்கு காரணம் இப்போதுதான் புரிந்தது" என ஒருவர் கமெண்ட் போட, மற்றொருவர்,"மரபணு சோதனை எடுத்து பாருங்கள்" என கமெண்ட் செய்திருக்கிறார்.
அச்சமாக இருக்கிறது
இதைத் தொடர்ந்து இந்த இளம் பெண்கள் பதிவிட்ட வீடியோவில் "மரபணு சோதனை எடுக்க வேண்டுமா? எங்களுக்கு அச்சமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இருவரும் பிரேக்-அப் செய்வார்களா? என பலரும் இணையத்தில் விவாதித்து வந்த நிலையில், இவர்கள் புது கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். அதில்,"நாங்கள் உண்மையில் உறவினராக இருந்தால் ஒன்றாக இருப்பது தவறா?" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இருவரும்.
,மேலும், இருவரும் இரண்டு வருடங்களாக டேட்டிங்கில் இருந்து வருவதாகவும், உண்மையில் ஒருவருக்கொருவர் நேசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | இல்ல புரில.. பொம்மையை கல்யாணம் செஞ்சு.. குட்டி பொம்மைக்கு அம்மா ஆகிவிட்டதாக அறிவித்த பெண்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதலனை கரம்பிடிக்க பிலிப்பைன்ஸ்-ல் இருந்து கேரளா வந்த பெண்..கல்யாணமாகி 10 நாள்ல நடந்த பெரும் சோகம்..!
- "30 வருஷமா கஷ்டப்பட்டு வளர்க்குறேன்".. கை விரல்களில் நகம் வளர்க்க ஆசைப்பட்ட பெண்.. அதுக்குன்னு இவ்வளவா? வைரலாகும் புகைப்படங்கள்..!
- ‘கணவர் வெளிநாட்டில் வேலை’.. வீட்டில் தனியாக இருந்த தாய், மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு..!
- "கப்பல்ல ஏறின ஒரு பெண்ணை காணோம்"..கேப்டனுக்கு பறந்த தகவல்.. நடுக்கடல்ல நிறுத்தப்பட்ட சொகுசு கப்பல்.. ஆபிசர்கள் சொல்லிய ஷாக் நியூஸ்..!
- "ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!
- மர்மமான முறையில் மனைவி மரணம்.. சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் கணவன் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- Fake Instagram ID.. புரொபைல் போட்டோவில் வேறொரு நபர்.. ஏமாந்த 100-க்கும் மேற்பட்ட பெண்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- சந்தேகப்பட்ட காதல் கணவன்.. கடுப்பில் மனைவி செஞ்ச பகீர் காரியம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!
- "பெத்த பொண்ண பாக்க காசு இல்லாம பிச்சை எடுக்குறேன்" ..கோயம்பேட்டில் வசிக்கும் ஆதரவற்ற பெண்களின் துயரம்..கலங்கவைக்கும் வீடியோ..!
- வார்னே அறைக்கு கடைசியாக வந்த '4' பெண்கள்.. மரணத்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள்.. நடந்தது என்ன?