பெண்ணின் உடலில் ‘மது’ சுரக்கும் ‘அதிசயம்’... மருத்துவர்களுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘பரிசோதனை’ முடிவுகள்... ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்தும் சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு சிறுநீரகப்பையில் மது சுரக்கும் அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரத்தில் வசிக்கும் 61 வயது பெண் ஒருவர் அதிக மதுப்பழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக பிட்ஸ்பர்க் மருத்துவமனைக்கு சென்றபோது, சோதனையில் அவருடைய சிறுநீரில் மது கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவர்கள்,  “இது ஒரு அரிய வகை நோய். இதற்கு மருத்துவ துறையில் ‘Bladder Fermentation Syndorme’ அல்லது ‘Urinary Auto-Brewary Syndrome’ என்று பெயர்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படுபவர் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடும் போது தானாகவே சிறுநீரகப்பையில் மது சுரக்கும் எனவும், இது மதுப்பழக்கம் இல்லாத நபருக்கு கூட ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு சிறுநீரில் குளூக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகப் பையில் ஈஸ்ட் அளவு அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த ஈஸ்டானது மது சுரப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நோயானது கடந்த ஆண்டு சீனாவை சேர்ந்த 27 வயது நபர் ஒருவருக்கு இருந்து கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

US, WOMAN, KIDNEY, BLADDER, ALCOHOL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்